2nd July 2025
இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி வெளியேறும் இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் படைத்தளபதி மேஜர் ஜெனரல் பீ.ஆர். பத்திரவிதான யூஎஸ்ஏடப்ளியூசீ அவர்களுக்கு 2025 ஜூன் 28, அன்று இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி தலைமையகத்தில் பிரியாவிடை வழங்கப்பட்டது.
வருகையின் போது அவருக்கு இராணுவ மரபுகளுக்கமைய பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் அன்றைய நிகழ்வை நினைவுகூரும் வகையில் குழுப்படம் எடுத்தல் மற்றும் அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்துபசாரத்தில் கலந்து கொண்டதுடன் அதைத் தொடர்ந்து படையினருக்கு உரையாற்றினார்.
இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி சிப்பாய்கள் பங்குபற்றினர்.