இராணுவ படையணிகளுக்கிடையிலான கபடி சாம்பியன்ஷிப் - 2024
23rd November 2024
இராணுவ படையணிகளுக்கிடையிலான கபடி சாம்பியன்ஷிப் 22 நவம்பர் 2024 அன்று பனாகொட உள்ள இராணுவ உடற்பயிற்சி பாடசாலையில் நிறைவடைந்தது.
12 படையணிகளை சேர்ந்த வீரர்கள் சாம்பியன்ஷிப்பில் தங்கள் இணையற்ற திறமைகளையும் உறுதியையும் வெளிப்படுத்தினர்.
நிதி முகாமைத்துவ பணிப்பக பணிப்பாளர் நாயகமும் இராணுவ பொது சேவை படையணியின் படைத்தளபதியும் மற்றும் இராணுவ கபடிக் குழுவின் தலைவருமான மேஜர் ஜெனரல் ஏஎம்கேஜிபீஎஸ்கே அபேசிங்க அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பரிசளிப்பு விழாவை சிறப்பித்தார்.
கடுமையான போட்டிகளுக்குப் பிறகு, புதிய ஆண்கள் அணி சாம்பியன்ஷிப்பில் இலங்கை பொறியியல் சேவைகள் படையணி சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டது. இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி இராண்டாமிடத்தினையும் இலங்கை இராணுவ பொது சேவைப் படையணி மூன்றாமிடத்தினையும் வென்றது.
மேலும் இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.