இராணுவ படையணிகளுக்கு இடையிலான எல்லே சாம்பியன்ஷிப் - 2024 வெற்றிகரமாக நிறைவு
29th October 2024
இலங்கை இராணுவ எல்லே குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இராணுவப் படையணிகளுக்கு இடையிலான எல்லே சாம்பியன்ஷிப் – 2024 போட்டி பன்னிரண்டு படையணிகளைச் சேர்ந்த 300 இற்கும் மேற்பட்ட வீரர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் 2024 ஒக்டோபர் 25 ஆம் திகதி தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் வெற்றிகரமாக நிறைவுற்றது.
ஆடவருக்கான இறுதிப் போட்டியில், இலங்கை இராணுவ சேவைப் படையணி, இலங்கை இலேசாயுத காலாட் படையணியை தோற்கடித்து சாம்பியன்ஷிப் கிண்ணத்தைபை பெற்றுக்கொண்டது. இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி மூன்றாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது. இலங்கை இராணுவ சேவைப் படையணி கோப்ரல் ஆர்.ஏ.எஸ்.எச். ஜயரத்ன அவர்கள் சிறந்த வீரராகவும், இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் சிப்பாய் எல்.எச்.ஏ.ஜே மதுவந்த சிறந்த களதடுப்பாளராகவும், இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் கோப்ரல் கே.ஐ. லக்மால் சிறந்த துடுப்பாட்ட வீரராகவும் தெரிவு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன.
பெண்களுக்கான இறுதிப் போட்டியில், 1 வது இலங்கை இராணுவ மகளிர் படையணி, 2 வது (தொ) இலங்கை இராணுவ மகளிர் படையணியை தோற்கடித்து சம்பியனாகியது. 1 வது இலங்கை இராணுவ மகளிர் படையணியின் சார்ஜன் கே.எம்.எஸ்.எஸ். விமலரத்ன சிறந்த பெண் வீராங்கனை மற்றும் சிறந்த துடுப்பாட்ட வீராங்கனைக்கான விருதுகளைப் பெற்றுக்கொண்டதுடன், 2 வது (தொ) இலங்கை இராணுவ மகளிர் படையணியின் கோப்ரல் என்.எல்.எஸ்.கே. இந்திரவன்ஷா சிறந்த களதடுப்பாளருக்கான விருதையும் பெற்றுக் கொண்டார்.
பாதுகாப்பு பதவி நிலை பிரதானி அலுவலகத்தின் பதவி நிலை பிரிதானியும் இராணுவ எல்லே குழுவின் தலைவருமான மேஜர் ஜெனரல் கே.வி.என்.பீ. பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு வெற்றியாளர்களுக்கு விருதுகளையும் வெற்றிக் கிண்ணங்களையும் வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.