Header

Sri Lanka Army

Defender of the Nation

27th September 2017 08:30:26 Hours

68 ஆவது இராணுவத் தினத்திற்கு அனைத்து நிகழ்வுகளும் தயார்

எமது நாட்டின் கிட்டத்தட்ட மூன்று தசாப்த காலமாக இடம் பெற்ற கொடிய பயங்கரவாத யுத்தத்தை நிறைவு செய்த இராணுவம் 2017ஆம் ஆண்டு ஒக்டோபர் 10ஆம் திகதி தமது 68ஆவது ஆரம்ப நினைவாண்டைப் பெருமிதத்தோடு கொண்டாடவுள்ளது.

இந் நிகழ்வானது பௌத்த ,கத்தோலிக்க ,இஸ்லாம் மற்றும் இந்து மத அனுஷ்டானங்களின் ஆசியுடன் இடம்பெறவுள்ளது.

அந்த வகையில் எதிர்வரும் 28ஆம் திகதி செப்டெம்பர் மாதம் கண்டியிலுள்ள ஸ்ரீ தலதா மாளிகையில் பௌத்த மத ஆசீர்வாதங்களைப் பெறும் நோக்கில் லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் கலந்து கொள்ளவுள்ளார்.

அந்த வகையில் ஒக்டோபர் 2ஆம் திகதி அனுராதபுர ஜயசிறி மகா போதி விகாரையில் பௌத்த மத ஆசிகளைப் பெறும் நிகழ்வும் இடம் பெறவுள்ளது.

இந் நிகழ்வில் உயர் அதிகாரிகள் மற்றும் படைவீர்கள் போன்றௌர் கலந்து கொள்வர்.

அந்த வகையில் ஒக்டோபர் 3ஆம் திகதி கிறிஸ்தவ மத வழிபாடுகளின் நிமித்தம் பொரல்லையிலுள்ள கிறித்தவ ஆலயங்களில் இடம் பெறும்.

மேலும் ஒக்டோபர் 4ஆம் திகதி காலை இஸ்லாம் மத வழிபாடுகள் இராணுவ முஸ்லிம் மத சங்கத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்டு ஜீம்மா பள்ளிவாசலில் இடம் பெறும்.

அத்தோடு அன்றய தினமே இந்து மத வழிபாடுகள் இராணுவ இந்து மத சங்கத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்டு ஸ்ரீ பொன்னம்பல வானேஷ்வரர் கோவிலில் இடம் பெறும்.

அத்தோடு ஒக்டோபர் 6ஆம் திகதி கதிர்காம வேலன் கோவிலி;ல் மத வழிபாடுகள் இடம் பெறவிருப்பதுடன் 1500 எண்ணெய் விளக்குகளும் ஏற்றப்படவுள்ளது.

மேலும் காவடி ஆட்ட நிகழ்வுகளும் இடம் பெறும்.

மேலும் ஒக்டோபர் 8ஆம் திகதி இரவு நேர வழிபாடுகள் 1000 படை வீரர்களின் பங்கேற்படும் பனாகொடையிலுள்ள ஸ்ரீ போதிராஜாராமா விகாரையில் இடம் பெறும்.

மேலும் ஒக்டோபர் 9ஆம் திகதி காலை வேளை அன்னதானம் வழங்கும் நிகழ்வும் 20 பௌத்த மத தேரர்கள் உள்ளடங்களாக 68 பௌத்தமத தேரர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

அந்த வகையில் இராணுவத் தினமான ஒக்டோபர் 10ஆம் திகதி இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் தலைமையில் இராணுவ அணிவகுப்பு மரியாதைகளுடன் பனாகொடை இராணுவத் தலைமையகத்தில் இடம் பெறும்.

மேலும் ஒக்டோபர் 11ஆம் திகதி ராகமையிலுள்ள யுத்தத்தின் போது போரிட்டு அங்கவீனமுற்ற ரணவிரு செவண எனும் இராணுவ மையத்தில் உள்ள படைவீரர்களுக்கு இரா உணவு வழங்கும் நிகழ்வும் இராணுவத் தளபதியவர்களின் தலைமையில் இடம் பெறும்.

இவ் அனைத்து நிகழ்வுகளும் இராணுவத் தளபதியவர்களின் தலைமையில் இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள் போன்றவர்களின் பங்களிப்போடு இடம் பெறும்.

மேலும் பௌத்த ,கிறிஸ்தவ ,முஸ்லிம் மற்றும் இந்து மத வழிபாடுகள் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகங்கள் வன்னி ,மேற்கு மற்றும் இராணுவ மீள்குடியேற்ற பணியகம் , இராணுவ சுகாதார சேவைகள் பணியகம் போன்ற இராணுவத்தின் 68ஆவது ஆரம்ப நினைவாண்டை முன்னிட்டு தமது பங்களிப்பை வழங்கவுள்ளனர்.

அத்தோடு நாடு முழுவதுமுள்ள அனைத்து படைத் தலைமையகங்களும் இந் நிகழ்விற்கான எற்பாடுகளில் ஈடுபட்டவண்ணம் உள்ளது.

1. 68 ஆவது இராணுவ தினத்தை முன்னிட்டு கண்டியில் பௌத்த சமய நிகழ்வுகள்

2. ஜெய ஸ்ரீ மஹா போதியில் இராணுவ ஆசீர்வாத நிகழ்வுகள்

3. இராணுவ நினைவு தினத்தை முன்னிட்டு கிறிஸ்த்தவ மத ஆசீர்வாத நிகழ்வு

4. இராணுவ தினத்தை முன்னிட்டு முஸ்லீம் சமய ஆசீர்வாத நிகழ்வு

5. இராணுவ தினத்தை முன்னிட்டு சைவ மத வழிபாடுகள்

6. இராணுவதினத்தை முன்னிட்டு கதிர்காமம், கிரிவெஹெரவில்ம தவழிபாடுகள்

7. இராணுவ தினத்தை முன்னிட்டு இறுதி சமய ஆசீர்வாத நிகழ்வுகள் பனாகொடையில்

8. உலகப் புகழ்பெற்ற இலங்கை இராணுவம் 68 ஆண்டுகளை தாண்டியுள்ளது

9. 68 ஆவது இராணுவ தினத்தை கொண்டாடும் இலங்கை இராணுவம்

10. இராணுவ நினைவு தினத்தை முன்னிட்டு மரணித்த படை வீரர்களை நினைவு படுத்தும் நிகழ்வு

11. அத்திடிய மிஹிந்துசெத் மெதுரடவிற்கு இராணுவ தளபதி விஜயம்

Asics shoes | New Balance 991 Footwear