முன்னாள் படை வீரர்களின் பக்கம்

Veterans

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வாவை பிரதிநிதித்துவப்படுத்தி பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் உபய மெதவெல இன்று (11) பிற்பகல் கொழும்பு 5 ஜாவத்தையிலுள்ள பொதுநலவாய போர் நினைவுச் சின்னத்தில் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 'நினைவு அனுஸ்டிப்பு நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.


15 மே 2010 அன்று மேஜர் ஜெனரல் நிலைக்கு உயர்த்தப்பட்ட கெமுனு ஹேவா படையணியின் மேஜர் ஜெனரல் எம்எம் சுமனசேன (ஓய்வு) அவர்களுக்கு படையணி தலைமையகத்தில் நிலை உயர்விற்கான பாராட்டு விழா நடைபெற்றது.


சமகாலத்தில் இலங்கை இராணுவத்தால் இதுவரை உருவாக்கப்பட்ட மிகச் சிறந்த போர் வீரர்களில் ஒருவரான லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவவின் 24 வது நினைவு தினம் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 8) அனுஷ்டிக்கப்பட்டது. மறைந்த புகழ்பெற்ற போர் வீரரின் துணைவியார் திருமதி லலி கொப்பேகடுவ மற்றும் அவரது படையணியான இலங்கை கவச வாகனப் படையணி ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்ட பல நினைவு நிகழ்ச்சிகள் அனுராதபுரத்திலும் பிற இடங்களிலும் நாள் முழுவதும் நடைபெறறன.


விஷேட படையணியின் ‘முன்னாள் வீரர்களின் ஒன்றுகூடல்’ 2023 டிசம்பர் 9 – 10 ம் திகதிகள் விஷேட படையணியின் 27வது படையணி தினத்துடன் இணைந்து நாவுல விஷேட படையணி தலைமையகத்தில் நடைபெற்றது.