சிவில் பணிகள்
23 வது கெமுனு ஹேவா படையணியினால் பளை வைத்தியசாலையில் இரத்த தானம் வழங்கல்
யாழ்.பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி மற்றும் 52 வது காலாட் படைப்பிரிவு தளபதி ஆகியோரின் வழிகாட்டலில் 522 வது காலாட் பிரிகேட் தளபதி அவர்களின் மேற்பார்வையின் கீழ் 23 வது கெமுனு ஹேவா படையணி படையினர் 2025 பெப்ரவரி 23 அன்று பளை மருத்துவமனையில் இரத்த தான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர்.
படையினர் பொதுமக்களின் பங்களிப்புடன் சுத்தம் செய்யும் பணிகளில்
தூய இலங்கை திட்டத்தில், மன்னார் மாவட்ட பொதுமக்கள் 2025 பெப்ரவரி 23 அன்று 24 கடலோரப் பகுதிகளில் கடற்கரை சுத்தம் செய்யும் திட்டத்தை முன்னெடுத்தனர்.
மத்திய பாதுகாப்புப் படையினரால் நோன்பு காலத்திற்கு தயாராகும் முஸ்லிம் சமூகத்திற்கு உதவி
வரவிருக்கும் நோன்பு காலத்திற்கு தயாராகும் முஸ்லிம் சமூகத்தை ஆதரிப்பதற்காக, ஹப்புத்தளை, தியத்தலாவை மற்றும் கஹகொல்ல ஜும்மா பள்ளிவாசல்களுக்கு பேரீச்சம்பழங்களை விநியோகிக்கும் திட்டத்தை மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக படையினர் 2025 பெப்ரவரி 24 அன்று முன்னெடுத்தனர்.
வன்னி பாதுகாப்புப் படையினரால் 2025 பெப்ரவரி 20 ஆம் திகதி பாடசாலையில் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது
21 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூடபிள்யூஎம்பீடபிள்யூபிஆர் பாலமகும்புர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் 212 வது மற்றும் 561 வது காலாட் பிரிகேட் தளபதிகளின் மேற்பார்வையின் கீழ், தூய இலங்கை திட்டத்தின் முதல் கட்டத்தின் ஒரு பகுதியாக, வன்னி பாதுகாப்புப் படைகளில் அமைந்துள்ள பாடசாலைகளை தூய்மையாக்கும் திட்டத்தை படையினர் 2025 பெப்ரவரி 20 அன்று மேற்கொண்டனர்.
கிழக்குப் பாதுகாப்புப் படையினரால் 2025 பெப்ரவரி 20 ஆம் திகதி பாடசாலை சுத்தம் மற்றும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது
தூய இலங்கை திட்டத்திற்கமைய இராணுவத் தளபதியின் வழிகாட்டுதல் மற்றும் கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் பீஆர் பத்திரவிதான யூஎஸ்ஏடபிள்யூசீ பீஎஸ்சீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் கிழக்கு பாதுகாப்புப் படையின் படையினர் 2025 பெப்ரவரி 20 ஆம் திகதி பாடசாலையை சுத்தம் செய்தல் மற்றும் புனரமைத்தல் பணிகளை மேற்கொண்டனர்.
மத்திய பாதுகாப்பு படையினரால் பாடசாலை தூய்மையாக்கும் பணி
இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் கேஏடபிள்யூஎன்எச் பண்டாரநாயக்க யூஎஸ்பீ அவர்களின் மேற்பார்வையில் ‘தூய இலங்கை’ திட்டத்தின் முதல் கட்டமாக, 2025 பெப்ரவரி 20, அன்று படையினர் பாடசாலை சுத்தம் செய்யும் திட்டத்தை முன்னெடுத்தனர்.
641 வது காலாட் பிரிகேட் படையினரால் நன்கொடை திட்டம்
641 வது காலாட் பிரிகேட் படையினரால் நாரங்கமுவ ஆரம்ப பாடசாலையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த 50 சிறுவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் நன்கொடையாக வழங்கும் திட்டம் 2025 பெப்ரவரி 13 ம் திகதியன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் விசேட விரிவுரை
புதன்கிழமை பயிற்சி நாள் திட்டத்தின் ஒரு பகுதியாக, "இலங்கை இராணுவத்தில் சட்ட கட்டமைப்பு" தொடர்பான சிறப்பு விரிவுரை 2025 பெப்ரவரி 13 அன்று யாழ்ப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்பட்டது.
6 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினரால் கடற்கரை சுத்தம்
‘தூய இலங்கை’ திட்டத்திற்கு இணங்க, இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், 6வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினரால் 2025 பெப்ரவரி 18 அன்று முள்ளிவாய்க்கால் கடலோரப் பகுதியில் கடற்கரை சுத்தம் செய்யும் திட்டத்தை முன்னெடுத்தனர். இத்திட்டத்தில் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர்.
பாடசாலை மாணவர்களின் மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டு நிகழ்வில் 141 வது காலாட் பிரிகேட் தளபதி லக்பஹான கலந்து சிறப்பிப்பு
கந்தானை, லக்பஹான சர்வதேச பாடசாலையில் புதிதாக நியமிக்கப்பட்ட மாணவ தலைவர்களின் சின்னம் சூட்டு நிகழ்வு 2025 பெப்ரவரி 14 அன்று பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் 141 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஆர்ஆர்டிஎஸ் தர்மவிக்ரம ஆர்எஸ்பீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.