சிவில் பணிகள்
52 வது காலாட் படைப்பிரிவினால் சுற்றுச்சூழல் சுத்தம் செய்யும் திட்டம்
‘தூய இலங்கை திட்டத்தின்’ ஒரு பகுதியாக, யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகம் 2025 ஜனவரி 30 ம் திகதி சிரமதான திட்டத்தை மேற்கொண்டுள்ளது. இந்த நிகழ்ச்சித் திட்டம் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மற்றும் 52 வது காலாட் படைப்பிரிவின் தளபதி ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் நடாத்தப்பட்டது.
11 வது காலாட் படைப்பிரிவின் தளபதியினால் விரிவுரை
மத்திய மாகாண பொறியியல் சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளரின் வேண்டுகோளின் பேரில், 11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கேஏயூ கொடித்துவக்கு ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் தலைமைத்துவம், நேர்மறை சிந்தனை மற்றும் ஆளுமை மேம்பாடு பற்றிய விரிவுரையை 2025 ஜனவரி 28 ஆம் திகதி பொறியியல் சேவைகள் திணைக்கள வளாகத்தில் நடாத்தினார்.
குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தின் புதிய வீட்டுக்கு 16 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியினரால் அடிக்கல் நாட்டல்
சிவில் சமூகத்திற்கும் இலங்கை இராணுவத்திற்கும் இடையிலான நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்கான இராணுவத் தளபதியின் நோக்கத்திற்கு அமைய , கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பீஆர் பத்திரவிதான யூஎஸ்ஏடபிள்யூசீ பீஎஸ்சீ அவர்களின் அறிவுறுத்தலின் கீழ், 24 வது காலாட் படைப்பிரிவு தளபதியின் மேற்பார்வையில் 16 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர் அரந்தலாவாவில் குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தின் வீடு கட்டும் திட்டத்திற்கான அடி கல்லை நாட்டினர்.
கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி கிழக்கு மாகாண ஆயரை சந்திப்பு
மேஜர் ஜெனரல் பீ.ஆர். பத்திரவிதான யூஎஸ்ஏடப்ளியூசி அவர்கள், கிழக்கு மாகாண ஆயர், வண. கிறிஸ்டியன் நோயல் இம்மானுவேல் ஆயர் அவர்களை 2025 ஜனவரி 22 ஆம் திகதி மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
4 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியினால் வறிய மாணவர்களுக்கு உதவி
11 வது காலாட் படைப்பிரிவின் 641 வது காலாட் பிரிகேடின் 4 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் பீ.கே வருவங்கொடகே ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ எல்எஸ்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 4 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினர் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கான நன்கொடை திட்டத்தை 2025 ஜனவரி 21 ஆம் திகதி தம்புள்ள கிரலகொல்ல ஆரம்ப பாடசாலையில் நடாத்தினர்.
பன்சியகம கிராமிய வைத்தியசாலையின் கட்டுமானப் பணிகள் படையினரால் நிறைவு
பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தல்கள் மற்றும் ஒப்புதலின் கீழ் இலங்கை இராணுவ தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், 9 வது (தொ) பொறியியல் சேவைகள் படையணி படையினர், குருநாகல் மாவட்ட மெல்சிரிபுர பன்சியகம கிராமிய வைத்தியசாலையின் கட்டுமானப் பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்தனர்.
7வது கெமுனு ஹேவா படையணி படையினரால் சிரமதான பணி
இராணுவ தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பீ.ஆர் பத்திரவிதான யூஎஸ்ஏடபிள்யூசீ பீஎஸ்சீ அவர்களின் மேற்பார்வையில் 7வது கெமுனு ஹேவா படையணி கட்டளை அதிகாரியின் மேற்பார்வையில், "தூய இலங்கை" திட்டத்தின் ஒரு பகுதியாக, 2025 ஜனவரி 25 அன்று நாவல்லடி முதல் ரிதிதென்ன வரையிலான ஏ11 (மட்டக்களப்பு முதல் பொலன்னறுவை வரை) பாதையில் சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டது.
கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக படையினரால் பாடசாலை உபகரணங்கள் நன்கொடை
கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பீஆர் பத்திரவிதான யூஎஸ்ஏடபிள்யூசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், வெலிகந்த பாலர் பாடசாலையின் 60 சிறுவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் அத்தியாவசிய கற்றல் பொருட்கள் நன்கொடையாக வழங்கும் நிகழ்வு 2025 ஜனவரி 26 ம் திகதி இடம் பெற்றது.
10 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினரால் தென்னியன்குளம் குளக்கட்டு சீரமைப்பு
நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக, தென்னியன்குளம் குளக்கரையின் நிரம்பி வழியும் இடம் சிறிது சேதமடைந்துள்ளது. இதனால் வரவிருக்கும் பேரழிவை உடனடியாக நிவர்த்தி செய்யும் வகையில், 56 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மற்றும் 561 வது காலாட் பிரிகேட் தளபதி ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ், 10 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் கேஏகே ஹேவாபதகே அவர்களின் மேற்பார்வையில் 10 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினர் 2025 ஜனவரி 19 அன்று சீரமைப்பு பணிகளை முன்னெடுத்தனர்.
18 வது கெமுனு ஹேவா படையணி படையினரால் பிபில குளக்கட்டு சீரமைப்பு
மொனராகலை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, 18 வது கெமுனு ஹேவா படையணி படையினர், கரகஹவெல கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளுடன் இணைந்து, 2025 ஜனவரி 26 அன்று பிபில,அலவத்த கும்புர குளக்கட்டு அரிப்பை தடுத்தனர்.