சிவில் பணிகள்
அபிமன்சல-II இல் படையினர் சிரமதான பணி
“தூய இலங்கை” திட்டத்திற்கு அமைய இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், அபிமன்சல-II நலவிடுதியின் படையினர் 2025 ஜனவரி 21 ஆம் திகதி வில்பிட்டவத்த பாதையில் சிரமதான பணியை முன்னெடுத்தனர்.
வெள்ளம் சூழ்ந்த பகுதியில் இருந்து மூன்று கிராம மக்களை 23 வது காலாட் படைப்பிரிவு படையினர் மீட்பு
2025 ஜனவரி 19 அன்று ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக கிராமவாசிகள் வெள்ளத்தில் சிக்கித் தவித்ததை தொடர்ந்து 232 வது காலாட் பிரிகேட்டின் 12 வது கெமுனு ஹேவா படையணி படையினர் தீவிரமாக செயற்பட்டு உடனடியாக மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டு, அவர்களுக்கு பாதுகாப்பையும் உடனடி உதவியையும் வழங்கினர்.
மேற்கு பாதுகாப்பு படை தலைமையகத்தினால் வீடு வழங்கல்
இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் பதில் தளபதியும் மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 2025 ஜனவரி 22ம் திகதி அன்று பண்டாரகம, வல்கமாவில் செல்வி எம். நிலுஷா குமாரி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீட்டை அதிகாரப்பூர்வமாக கையளிப்பதற்கான நிகழ்வில் கலந்து கொண்டார்.
51வது காலாட் படைப்பிரிவினரால் தூய்மை திட்டம்
அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் தொலைநோக்குப் பார்வையின் கீழ் தொடங்கப்பட்ட ‘ தூய இலங்கை” திட்டத்தின்’ ஒரு பகுதியாக, யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் வைஎபிஎம் யஹம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் தலைமையில், 51வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்பீஎன்எ முத்துமால யூஎஸ்பீ பீஏஸ்சீ அவர்களின் மேற்பார்வையில், யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தினரால் துப்புரவு திட்டம் 2025 ஜனவரி 21 அன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
52 வது காலாட் படைப்பிரிவினால் கடற்கரை தூய்மையக்கல்
அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் தொலைநோக்குப் பார்வையின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட 'தூய இலங்கை திட்டத்தின்' ஒரு பகுதியாக, யாழ். பாதுகாப்புப் படை தலைமையக படையினயினரால் தூய்மையக்கல் நிகழ்வென்று யாழ். பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்களின் தலைமையில் 52 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் வீ.டி.எஸ். பெரேரா அவர்களின் மேற்பார்வையில் 2025 ஜனவரி 22 ம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டது.
10 வது (தொ) பொறியியல் சேவைகள் படையணி படையினரால் ஹம்பாந்தோட்டையில் பாலர் பாடசாலை கட்டுமானப் பணிகள் நிறைவு
இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் பொறியியல் சேவைகள் பணிப்பகத்தின் மேற்பார்வையின் கீழ், 10 வது (தொ) பொறியியல் சேவைகள் படையணி படையினர் 2025 ஜனவரி 21 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை கிறிஸ்து தேவாலயத்தின் பாலர் பாடசாலை கட்டிடத்தின் கட்டுமானத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தனர்.
221 வது காலாட் பிரிகேட்டினரால் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள்
221 வது காலாட் பிரிகேட் படையினரால், திருகோணமலை, சாகரபுரம் பாலர் பாடசாலை மாணவர்களுக்கு அத்தியாவசிய பாட புத்தகங்கள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் 2025 ஜனவரி 16 அன்று வழங்கப்பட்டது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீரையடி குளம் கிழக்கு படையினரால் சீரமைப்பு
24 வது காலாட் படைப்பிரிவின் 241 வது காலாட் பிரிகேடின் 18 வது விஜயபாகு காலாட் படையணி படையினர், 2025 ஜனவரி 19 அன்று சேதமடைந்த வீரையடி குளத்தை வெற்றிகரமாக சீரமைத்தனர். மேலும் மண்அரிப்பு மற்றும் சேதத்தைத் தடுக்க பாதிக்கப்பட்ட பகுதிகளில் படையினர் மண் மூட்டைகளை அடுக்கி சீரமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். இந்த உடனடி நடவடிக்கையானது சுற்றியுள்ள சமூகங்களுக்கு ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைக்க உதவியது.
11 வது விஜயபாகு காலாட் படையணியினரால் நன்கொடை திட்டம்
11 வது விஜயபாகு காலாட் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் இஜீஜேபீ எதிரிசிங்க யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 11 வது விஜயபாகு காலாட் படையணியின் படையினர் கிருதேவி இந்து தமிழ் கலவன் பாடசாலை மற்றும் சிவபிரகாஷ் பாடசாலையின் 125 மாணவர்களுக்கு எழுது பொருட்கள் நன்கொடையாக வழங்கும் திட்டத்தை 2025 ஜனவரி 18, அன்று முன்னெடுத்தனர்.
இராணுவ படையினர் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் இருந்த இரண்டு கிராமவாசிகளை வெளியேற்றல்
2025 ஜனவரி 19 அன்று சீரற்ற வானிலை காரணமாக கெபிதிகொல்லாவ, எல்லேவெவவில் இரண்டு கிராமவாசிகள் சிக்கித் தவித்தனர். 5 வது (தொ) கஜபா படையணி படையினர் உடனடியாக மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டு, அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்து உடனடி உதவியை வழங்கினர்.