இராணுவ சிறப்பம்சம்
இலங்கை சமிக்ஞை படையணியில் சைபர் பாதுகாப்பு மற்றும் மின்னணு போர் தொடர்பான விரிவுரை
இலங்கை சமிக்ஞை படையணியில் "மின்னணு பாதுகாத்தல்" என்ற கருப்பொருளின் கீழ், 2025 செப்டம்பர் 12 அன்று பனாகொடை இலங்கை சமிக்ஞை படையணியில் அதிகாரிகள் உணவகத்தில் 9வது இலங்கை சமிக்ஞை படையணி மற்றும் 2வது சமிக்ஞை பிரிகேட்டுடன் இணைந்து ஏற்பாடு செய்த சைபர் பாதுகாப்பு மற்றும் மின்னணு போர் தொடர்பான விரிவுரை நடாத்தப்பட்டது.
வருடாந்த போர்வீரர் அஞ்சலி மற்றும் மாணவச் சிப்பாய் தினத்தில் 11வது காலாட் படைப்பிரிவு தளபதி பங்கேற்பு
11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டிசீஎம்ஜீஎஸ்டி குரே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 2025 செப்டம்பர் 12 ம் திகதி கண்டி கிங்ஸ்வுட் கல்லூரியில் இடம்பெற்ற வருடாந்த போர்வீரர் நினைவஞ்சலி மற்றும் மாணவச் சிப்பாய் தினத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
எல்ல - வெல்லவாய பேருந்து விபத்தில் மீட்பு பணியில் ஈடுபட்ட படையினருக்கு பாதுகாப்புப் படைத் தளபதி பாராட்டு
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் கே.ஏ.டபிள்யூ.என்.எச் பண்டாரநாயக்க யூஎஸ்பீ அவர்கள் 2025 செப்டெம்பர் 13 ஆம் திகதி மத்திய பாதுகாப்புப் படைகள் தலைமையக படையினரை சந்தித்து அவர்களுக்கான உரையின் போது எல்ல – வெல்லவாய பஸ் விபத்தின் போது மீட்புப் பணியில் ஈடுபட்ட படையினரை பாராட்டினார்.
பயிற்சி பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் கடமை பொறுப்பேற்பு
பிரிகேடியர் பி.ஏ.டி.ஆர்.ஏ.சீ விஜயசேகர ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ யூஎஸ்ஏசீஎஸ்சீ அவர்கள் 2025 செப்டம்பர் 11 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற சம்பிரதாய நிகழ்வின் போது பயிற்சி பணிப்பகத்தின் பணிப்பாளராக கடமைகளை பொறுப்பேற்றார்.
3 வது இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியினால் 16 மீள் புதுப்பிக்கப்ட்ட 16 மோட்டார் சைக்கிள்கள் கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகத்திற்கு கையளிப்பு
மின்னேரியாவில் உள்ள 3 வது இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியினால் 2025 செப்டம்பர் 04 அன்று கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் உள்ள 16 படையலகுகளுக்கு மீள் புதுப்பிக்கப்பட்ட 16 மோட்டார் சைக்கிள்களை சம்பிரதாயபூர்வமாக படையலகு வளாகத்தில் கையளித்தது..
54 வது காலாட் படைப்பிரிவின் 15 வது ஆண்டு நிறைவு
54வது காலாட் படைப்பிரிவு அதன் 15வது ஆண்டு நிறைவை 2025 செப்டம்பர் 10 அன்று கொண்டாடியது.
காலாட் பயிற்சி நிலையத்தின் 41 வது ஆண்டு நிறைவு விழா
மின்னேரியா காலாட் பயிற்சி நிலையம் தனது 41வது ஆண்டு நிறைவு விழாவை 2025 ஆகஸ்ட் 25 ஆம் திகதி கொண்டாடியது. இந்நிகழ்வின் போது போர் வீரர்களின் நினைவுத் தூபியில் தளபதி அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பும் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் இசை நிகழ்ச்சி மற்றும் அனைத்து நிலையினருக்குமான இரவு விருந்துடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.
போர் பயிற்சி பாடசாலையின் புதிய தளபதி கடமை பொறுப்பேற்பு
பிரிகேடியர் ஏ.கே.சீ.எஸ் டி சில்வா ஆர்எஸ்பீ என்டிசீ அவர்கள் அம்பாறை போர் பயிற்சி பாடசாலையின் 48 வது தளபதியாக 2025 ஆகஸ்ட் 30 ஆம் திகதி நடைபெற்ற விழாவின் போது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
53 வது காலாட் படைப்பிரிவின் (அவசர கால தாக்குதல் படை) 30 வது ஆண்டு நிறைவு விழா
தம்புள்ளை, இனாமலுவையை தலைமையிடமாகக் கொண்ட 53 வது காலாட் படைப்பிரிவு (அவசர கால தாக்குதல் படை), 2025 ஆகஸ்ட் 24 ஆம் திகதி படைப்பிரிவு தலைமையகத்தில் அதன் 30 வது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடியது. இந்த நிகழ்வு 53 வது காலாட் படைப்பிரிவின் (அவசர கால தாக்குதல் படை) தளபதி மேஜர் ஜெனரல் ஜி.ஏ.டி கொடவத்த ஆர்டபிள்யூபீ ஆர்ஸ்பீ அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது.
24 வது காலாட் படைப்பிரிவின் புதிய தளபதி பதவியேற்பு
24 வது காலாட் படைப்பிரிவின் 17 வது தளபதியாக மேஜர் ஜெனரல் கே.டபிள்யூ ஜயவீர யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் 2025 ஆகஸ்ட் 26 ஆம் திகதி 24 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில் கடமைகளை பொறுப்பேற்றார்.