31st August 2025
பிரிகேடியர் ஏ.கே.சீ.எஸ் டி சில்வா ஆர்எஸ்பீ என்டிசீ அவர்கள் அம்பாறை போர் பயிற்சி பாடசாலையின் 48 வது தளபதியாக 2025 ஆகஸ்ட் 30 ஆம் திகதி நடைபெற்ற விழாவின் போது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
புதிய தளபதி முகாம் வளாகத்தில் ஒரு மரக்கன்று நாட்டியதுடன், குழுப்படம் எடுத்துக் கொண்டார். பின்னர், அவர் போர் பயிற்சி பாடசாலையின் படையினருக்கு உரையாற்றினார். மேலும், போர் பயிற்சி பாடசாலையின் நோக்கங்கள், தொலைநோக்கு மற்றும் நோக்கத்தை அடைவதில் அனைவரின் பங்களிப்பு மற்றும் ஆதரவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
இந்த நிகழ்வில் கட்டளை அதிகாரி, தலைமை பயிற்றுவிப்பாளர், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.