16th September 2025
11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டிசீஎம்ஜீஎஸ்டி குரே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 2025 செப்டம்பர் 12 ம் திகதி கண்டி கிங்ஸ்வுட் கல்லூரியில் இடம்பெற்ற வருடாந்த போர்வீரர் நினைவஞ்சலி மற்றும் மாணவச் சிப்பாய் தினத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
பாடசாலை மாணவச் சிப்பாய் படையணி குழுவினரால் தளபதிக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் முப்படைகளின் சிரேஸ்ட அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.