53 வது காலாட் படைப்பிரிவின் (அவசர கால தாக்குதல் படை) 30 வது ஆண்டு நிறைவு விழா

தம்புள்ளை, இனாமலுவையை தலைமையிடமாகக் கொண்ட 53 வது காலாட் படைப்பிரிவு (அவசர கால தாக்குதல் படை), 2025 ஆகஸ்ட் 24 ஆம் திகதி படைப்பிரிவு தலைமையகத்தில் அதன் 30 வது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடியது. இந்த நிகழ்வு 53 வது காலாட் படைப்பிரிவின் (அவசர கால தாக்குதல் படை) தளபதி மேஜர் ஜெனரல் ஜி.ஏ.டி கொடவத்த ஆர்டபிள்யூபீ ஆர்ஸ்பீ அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது.

வருகை தந்த தளபதிக்கு இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் தளபதி ஸ்ட்ரைக்கர்ஸ் பே வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நாட்டினார். பின்னர் அவர் அனைத்து நிலையினருக்குமான இரவு விருந்துபசாரத்தில் கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து அன்றய நாள் நிகழ்ச்சிகளின் நிறைவைக் குறிக்கும் வகையில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக 2025 ஆகஸ்ட் 24 ஆம் திகதி ஒரு கிரிக்கெட் போட்டி நடாத்தப்பட்டது. ஆண்டு நிறைவு விழாவிற்கு முன்னதாக, இனாமலுவை இசிபதனராமய விகாரையில் தூய்மையாக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. அதனுடன் 2025 ஆகஸ்ட் 22 ஆம் திகதி போதி பூஜை மற்றும் தொண்டு நிகழ்ச்சியும் நடைபெற்றது.