54 வது காலாட் படைப்பிரிவின் 15 வது ஆண்டு நிறைவு

54வது காலாட் படைப்பிரிவு அதன் 15வது ஆண்டு நிறைவை 2025 செப்டம்பர் 10 அன்று கொண்டாடியது.

இந்நிகழ்ச்சிக்கு இணையாக, தொடர் மத அனுஷ்டானங்கள் நடத்தப்பட்டன. 2025 செப்டம்பர் 05 அன்று மன்னார் திருக்கேதீஸ்வரம் கோவிலில் இந்து மத சடங்குகள் நடத்தப்பட்டதுடன் மன்னார் பள்ளி வாசலில் இஸ்லாமிய பிரார்த்தனைகளும் மன்னார் தேவாலயத்தில் கிறிஸ்தவ வழிபாடுகளும் நடத்தப்பட்டன.

2025 செப்டம்பர் 07 அன்று, தந்திரிமலை ராஜமகா விஹாரையில் விரதம் (சில்) அனுஷ்டிக்கும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் அந் நாளில், கோயில் வளாகத்தில் பால் சோறு தானம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இறுதி மத அனுஷ்டானமாக, "மனு வெஹெரா" விகாரையில் பாரம்பரிய போதி பூஜை நடத்தப்பட்டது.

மேலும் 2025 ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 08 வரை ஒரு விளையாட்டுப் போட்டி நடத்தப்பட்டது.

2025 செப்டம்பர் 10 அன்று படைப்பிரிவு தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் தளபதி படையினருக்கு உரையாற்றினார்.

அன்றைய நிகழ்வுகள் அனைத்து நிலையினருடனான மதிய உணவு மற்றும் மாலை இசை நிகழ்வுடன் நிறைவடைந்தன. 54 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஏ.எம்.சி அபேகோன் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டிசீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வுகளில் பங்கேற்றனர்.