எல்ல - வெல்லவாய பேருந்து விபத்தில் மீட்பு பணியில் ஈடுபட்ட படையினருக்கு பாதுகாப்புப் படைத் தளபதி பாராட்டு

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் கே.ஏ.டபிள்யூ.என்.எச் பண்டாரநாயக்க யூஎஸ்பீ அவர்கள் 2025 செப்டெம்பர் 13 ஆம் திகதி மத்திய பாதுகாப்புப் படைகள் தலைமையக படையினரை சந்தித்து அவர்களுக்கான உரையின் போது எல்ல – வெல்லவாய பஸ் விபத்தின் போது மீட்புப் பணியில் ஈடுபட்ட படையினரை பாராட்டினார். மேலும் மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி, இத்தகைய சூழ்நிலைகளின் போது பொதுமக்களுக்கு உதவுவதில் சமூகப் பொறுப்பை வலியுறுத்தி, மீட்புப் பணியின் போது அவர்கள் காட்டிய அர்ப்பணிப்பையும் பாராட்டினார்.

இந்த நிகழ்வில் பிரிகேடியர் பொதுப்பணிநிலை, 112 வது காலாட் பிரிகேட் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.