13th September 2025
மின்னேரியாவில் உள்ள 3 வது இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியினால் 2025 செப்டம்பர் 04 அன்று கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் உள்ள 16 படையலகுகளுக்கு மீள் புதுப்பிக்கப்பட்ட 16 மோட்டார் சைக்கிள்களை சம்பிரதாயபூர்வமாக படையலகு வளாகத்தில் கையளித்தது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மின்சார மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பாளர் நாயகம் ஜெனரல் மேஜர் ஜெனரல் சி. களுத்தரஆரச்சி அவர்கள் கலந்து கொண்டார். 3 வது இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியில் ஆரம்பிக்ப்பட்ட இந்த திட்டம், அதன் பணியாளர்களின் முன்முயற்சி, தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் அர்ப்பணிப்பு மூலம் வெற்றிகரமாக நிறைவுசெய்யப்பட்டது.