4th September 2025
மின்னேரியா காலாட் பயிற்சி நிலையம் தனது 41வது ஆண்டு நிறைவு விழாவை 2025 ஆகஸ்ட் 25 ஆம் திகதி கொண்டாடியது. இந்நிகழ்வின் போது போர் வீரர்களின் நினைவுத் தூபியில் தளபதி அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பும் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் இசை நிகழ்ச்சி மற்றும் அனைத்து நிலையினருக்குமான இரவு விருந்துடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.
ஆண்டு நிறைவை முன்னிட்டு கிரிக்கெட், கரப்பந்து, கூடைப்பந்து, எல்லே, கயிறுழுத்தல் மற்றும் ஆயுதப் பயிற்சி உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் 2025 ஆகஸ்ட் 20 அன்று நடாத்தப்பட்டன. மத அனுஷ்டானங்கள் மின்னேரியா தேவாலயத்தில் நடைபெற்ற பூஜையுடன் ஆரம்பமாகின. தொடர்ந்து, 2025 ஆகஸ்ட் 23 அன்று நாகலகந்த புராண ராஜமகா விஹாரையில் போதி பூஜை நடைபெற்றது. மேலும் அடுத்த நாள் காலை மகா சங்கத்தினருக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.
அனைத்து நிகழ்வுகளிலும் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர்.