Header

Sri Lanka Army

Defender of the Nation

25th February 2024 15:25:15 Hours

23 வது காலாட் படைப்பிரிவு படையினரால் மொனரதன்ன ஆரம்ப பாடசாலை பிள்ளைகளுக்கு உதவி

கிழக்கு பாதுகாப்புப் படை தலைமையகத்தின் 23 வது காலாட் படைப்பிரிவு படையினர், வெலிகந்த மொனரதன்ன ஆரம்ப பாடசாலையின் தேவையுடைய 35 மாணவர்களுக்கான அத்தியாவசிய பயிற்சித் திட்டத்தை பெப்ரவரி 22 ஆம் திகதி பாடசாலையில் ஏற்பாடு செய்தனர். இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்கேயுபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சி ஐஜீ அவர்கள் கலந்து கொண்டார்.

அதன்படி, மாணவர்களுக்கு பயிற்சி புத்தகம், பேனா, மதிய உணவுப் பெட்டி, தண்ணீர் போத்தல், பென்சில், பென்சில் கூர்மை படுத்தும் உபகரணம், அழிப்பான், நிறப்பென்சில்கள் உள்ளிட்ட பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டன. மேலும், அத்தியாவசிய விளையாட்டுப் பொருட்கள் மற்றும் பாடசாலையின் பயன்பாட்டிற்கு தேவையான ஏனைய உபகரனங்களும் பாடசாலை அதிபரிடம் வழங்கப்பட்டன. மேலும், அதே நேரத்தில் ஒவ்வொரு மாணவர்களின் குடும்பத்திற்கும் சத்துணவுப் பொதிகளும் வழங்கப்பட்டன.

படையினர் பாடசாலையின் பிரதான மண்டபத்தின் கூரையை சரிசெய்ததுடன், பிள்ளைகளின் பூங்காவையும் சீரமைத்தனர். நிகழ்ச்சியின் முடிவில் அனைத்து மாணவர்களும் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் மதிய உணவில் கலந்து கொண்டனர்.

செலான் வங்கியின் ஊழியர் மற்றும் கொழும்பில் உள்ள சில அனுசரணையாளர்கள் இப்பணிக்கு தேவையான நிதியுதவியை வழங்கினர்.

23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கேவீஎன்பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி, சிரேஷ்ட அதிகாரிகள், சிப்பாய்கள், திம்புலாகலை கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் (திட்டமிடல்) திரு. பீஜிஎஸ் அஜித் குமார, பிரதி கல்விப் பணிப்பாளர் (பாடசாலை) திருமதி டி.ஏடீ.வை.ஜி. தெவரப்பெரும, அனுசரணையாளர்களான திரு.திருமதி.சுரேஷ் பக்ஷவீர, திரு.திருமதி.கிருஷான் சில்வா, பாடசாலை ஊழியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.