Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd February 2024 17:31:01 Hours

57 வது ஆண்டு இராணுவ வீதி ஓட்ட போட்டி நிறைவு

57 வது தடவையாக ஒழுங்கமைக்கப்பட்ட வருடாந்த 'இராணுவ வீதி ஓட்டம்' வெள்ளிக்கிழமை (பெப்ரவரி 23) காலை இராணுவத் தலைமையக நுழைவாயில் இருந்து இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் எஸ்பீஏஐஎம்பி சமரகோன் எச்டிஎம்சி எல்எஸ்சி அவர்களினால் ஆரம்பிக்கப்பட்டது.

பத்தரமுல்லையிலிருந்து பனாகொட இராணுவ வளாகம் வரை சுமார் 22 கிலோமீற்றர் வரையிலான இந்த மரதன் ஓட்ட போட்டியில் 17 படையணிகளைச் சேர்ந்த 124 ஓட்டப்பந்தய வீரர்களும் 20 வீராங்கனைகளும் கலந்துகொண்டனர். இலங்கை இராணுவ தடகள குழு தலைவர் மேஜர் ஜெனரல் ஆர்ஏஜேஎன் ரணசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்ப்பட்டிருந்த்து.

காலை 6.00 மணிக்கு ஆரம்பமான இப்போட்டியானது, தியத்தஉயன, பத்தரமுல்ல, மாலபே, அதுருகிரிய மற்றும் ஹபரகட ஊடாக பனாகொட இராணுவ உடற்பயிற்சி கூடத்திற்கு அருகில் முடிவடைந்தது.

மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்டபிள்யூஎம் பெர்னாண்டோ டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சீ மற்றும் பல சிரேஷ்ட அதிகாரிகள் போட்டி நிறைவடையும் இறுதிக் கோட்டில் வீரர்களை வரவேற்பதற்காக கூடியிருந்தனர்.

பின்னர், இராணுவ தடகளக் குழுவின் தலைவருடன் இணைந்து வீதி ஓட்டப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சின்னங்கள் வழங்குவதற்காக மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி அழைக்கப்பட்டார்.

வீதி ஓட்ட போட்டியில் சாதனை படைத்தவர்களின் விபரங்கள் பின்வருமாறு;

ஒட்டுமொத்த சாம்பியன் (ஆண்கள்) - இராணுவ பீரங்கி படையணி

ஒட்டுமொத்த சாம்பியன் (பெண்கள்) - இராணுவ மகளிர் படையணி

ஆண்கள் பிரிவு

முதலாம் இடம் - இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் லான்ஸ் கோப்ரல் எச்.டி.எஸ்.டி குணசேகர

இரண்டாம் இடம் - இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் சிப்பாய் ஜி.கே.டி மதுசங்க

மூன்றாம் இடம் - இராணுவ பீரங்கி படையணியின் பொம்பொடியர் கே. சம்முகேஷ்வரன்

பெண்கள் பிரிவு

முதலாம் இடம் - இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் லான்ஸ் கோப்ரல் எச்.எம்.சி.எஸ் ஹேரத்

இரண்டாம் இடம் - இராணுவ சமிக்ஞை படையணியின் லான்ஸ் கோப்ரல் டபிள்யூ.ஏ.எம்.என் நிதர்ஷனி

மூன்றாம் இடம் - இராணுவ மகளிர் படையணியின் லான்ஸ் கோப்ரல் எல்.ஏ.என்.டி லியனகே