Header

Sri Lanka Army

Defender of the Nation

14th February 2024 21:26:05 Hours

நலன்புரி பணிப்பகத்தினால் படையினரின் நல்வாழ்விற்கு உதவி

அர்ப்பணிப்புள்ள படையினரின் வாழ்க்கையையும் நல்வாழ்வையும் மேம்படுத்துவதற்கான விரிவான நிகழ்ச்சியை இராணுவ தலைமையகத்தில் இன்று (பெப்ரவரி 14) நலன்புரி பணிப்பகம் நடாத்தியது. இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்பிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்நிகழ்ச்சியில் சுகாதாரம், மருத்துவ சேவைகள் மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு முயற்சிகள் மற்றும் வளங்களை உள்ளடக்கி உதவிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு அமையபெற்றிருந்தது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் கலந்து கொண்டார். பிரதம அதிதியின் வருகையின் பின்னர், நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் டபிள்யூ.டபிள்யூ.எச்.ஆர்.ஆர்.வி.எம்.என்.டி.கே.பி நியங்கொட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ விஎஸ்வி யூஎஸ்பீ என்டியூ அவர்களின் வரவேற்பு உரையுடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. அதனைத் தொடர்ந்து மங்கல விளக்கை ஏற்றி அறிமுக காணொளி காட்சிப்படுத்தப்பட்டது.

நிகழ்வின் முதல் பிரிவாக, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்து விளங்கிய படையினரின் பிள்ளைகளுக்கு இராணுவத் தளபதி ஏனைய சிரேஷ்ட அதிகாரிகளுடன் இணைந்து பாடசாலை உபகரணங்களை வழங்கினர். இதன் அடையாளமாக, 25 மாணவர்கள் இராணுவத் தளபதியிடமிருந்து பாடசாலை உபகரணப் பொதிகளைப் பெற்றுக்கொண்டனர். மேலும், 635 பிள்ளைகளுக்கு ஒரே மாதிரியான பாடசாலை உபகரணப் பொதிகள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதைத் தொடர்ந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளின் பிரதிநிதிகளுக்கும் இராணுவத் தளபதிக்கும் இடையே இலவச மருத்துவக் கோரிக்கை கொள்கைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இத்திட்டத்தில் நாடு முழுவதும் உள்ள முப்பத்து மூன்று தனியார் மருத்துவமனைகள் தங்கள் ஆதரவை வழங்குகின்றன. இதன மூலம் இராணுவத்தினருக்கு மருத்துவ வசதிகளை தடையின்றி வழங்க முடியும். இந்த ஒப்பந்தத்தின் கீழ், நலன்புரி பணிப்பகம் சுவசஹன காப்புறுதி திட்டத்தின் மூலம் மருத்துவமனையின் ரசிதுகளை நேரடியாகச் செலுத்தும், இது சேவையாளர்கள் மற்றும் பெண்களுக்கு விரைவான மற்றும் தொந்தரவில்லாத சுகாதார சேவையை உறுதி செய்யும். மேலும் ஆசிரி வைத்தியசாலை ஹோல்டிங்ஸ் பிஎல்சி, தேவைப்படும் வீரர்களின் குழந்தைகளுக்காக மாதாந்தம் இரண்டு இருதய அறுவை சிகிச்சைகளுக்கு நிதியுதவி வழங்குவதாக உறுதியளித்தது, ஒவ்வொன்றும் 1.5 மில்லியன் மதிப்புடையதாகும். முதல் நன்கொடை இயந்திரவியல் காலாட் படையணியின் சிப்பாயின் மகனின் இருதய அறுவை சிகிச்சைக்காக வழங்கப்பட்டது.

அடுத்ததாக இந்நிகழ்வில் கலந்துகொண்ட 25 பிள்ளைகளுக்கு ரூ.5000 பெறுமதியான ‘கற்றல் நண்பன்’(Study Budy) எனும் இணைய விண்ணப்பம் விநியோகிக்கப்பட்டதுடன், மேலும் 275 ‘கற்றல் நண்பன்’(Study Budy) இணைய விண்ணப்பங்களை விநியோகிப்பதற்கு மேலதிக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. திரு. சிதேஷ் சஞ்ஜீவ அவர்கள் மாணவர்களின் கற்றலை எளிதாக்குவதற்காக நலன்புரி பணிப்பகத்தின் ஒருங்கிணைப்பின் மூலம் இந்த நன்கொடையை வழங்கினார்.

பின்னர், இராணுவ வீரர்களின் பயன்பாட்டிற்காக இராணுவத் தலைமையக நூலகத்திற்கு நலன்புரி பணிப்பகம் 1 மில்லியன் பெறுமதியான வாசிப்பு நூல்களை வழங்கியது.

அதனைத் தொடர்ந்து, இராணுவத் தளபதிக்கு நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் விசேட நினைவுச் சின்னமொன்றை வழங்கினார். நிகழ்வின் இறுதியில் நலன்புரி பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் டபிள்யூ.எம்.எஸ்.சீ.கே.வனசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் நன்றியுரையாற்றினார்.

இராணுவ பதவி நிலை பிரதானி - மேஜர் ஜெனரல் டபிள்யூ எச் கே எஸ் பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ, இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் எஸ்பீஏஐஎம்பி சமரகோன் எச்டிஎம்சீஎல்எஸ்சீ, இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் எம்கே ஜயவர்தன ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ, மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள்,மற்றும் சிப்பாய்கள் பலர் கலந்து கொண்டனர்.