Header

Sri Lanka Army

Defender of the Nation

06th February 2024 19:42:54 Hours

இராணுவத் தளபதியினால் தனது பாராசூட் பாடநெறி வீரர்களுக்கு பராசூட் சின்னம்

அடிப்படை பாராசூட் பாடநெறி - எம்என்டிஎப் 04 இன் சின்னம் வழங்கும் விழா 2024 பெப்ரவரி 06 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் பிரதம அதிதியாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் கலந்து கொண்டார்.

மாலைதீவு தேசிய பாதுகாப்புப் படையணியின் 18 படையினர், இராணுவத்தைச் சேர்ந்த பதினைந்து வீரர்கள், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே மற்றும் இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் படைத் தளபதியும் ஒழுக்க பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமுமான மேஜர் ஜெனரல் ஏசிஏ டி சொய்சா யூஎஸ்பீ எச்டிஎம்சி எல்எஸ்சி ஆகியோர் குடாஓய கொமாண்டோ படையணி பயிற்சிப் பாடசாலையில் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்திருந்தனர்.

ஆரம்ப நிகழ்வாக கொமாண்டோ படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பீஜிபீஎஸ் ரத்நாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசி அவர்களினால் இராணுவத் தளபதி மரியாதையுடன் வரவேற்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, கொமாண்டோ படையணியின் தலைமையகத்தின் நிலைய தளபதி பிரிகேடியர் பிஎம்எஸ்கே தர்மவர்தன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

இராணுவத் தளபதி மற்றும் இராணுவ பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் டபிள்யூஎச்கேஎஸ் பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ என்டியூ ஆகியோர் புகழ்பெற்ற பராசூட் சின்னத்தை பாடநெறியை நிறைவு செய்தவர்களுக்கு அணிவித்தனர்.

நிகழ்வில் உரையாற்றிய இராணுவத் தளபதி, புதிய இராணுவ பராசூட் வீரர்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், இந்த மதிப்புமிக்க சின்னத்தை பெறுவதற்கான அவர்களின் அர்ப்பணிப்பையும் விடாமுயற்சியையும் பாராட்டினார். கொமாண்டோ படையணி பயிற்சிப் பாடசாலையின் பயிற்றுவிப்பாளர்களுக்கு பயிற்சி காலம் முழுவதும் அவர்களின் விலைமதிப்பற்ற வழிகாட்டுதல் மற்றும் ஆதரவிற்காக அவர் நன்றி தெரிவித்தார்.

பின்னர், பயிற்சியில் பங்கேற்றவர்களுடன் இராணுவத் தளபதி குழு படம் எடுத்துக் கொண்டார். இந்நிகழ்வைத் தொடர்ந்து, அனைத்து பங்கேற்பாளர்களும் தேனீர் விருந்துபசாரத்தில் கலந்து கொண்டதுடன், அங்கு இராணுவத் தளபதிக்கு தனது பராசூட் பாடநெறியாளர்களுடன் உரையாடும் வாய்ப்பைப் பெற்றார்.

பிரதிப் பதவி நிலைப்பிரதானி மேஜர் ஜெனரல் எஸ்பீஏஐஎம்பி சமரகோன் எச்டிஎம்சி எல்எஸ்சி, இலங்கைக்கான மாலைதீவு உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் ஹசன் அமீர், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டனர்.