Header

Sri Lanka Army

Defender of the Nation

06th February 2024 11:01:52 Hours

இந்தியா உயர் பாதுகாப்பு முகாமை பாடநெறியின் பிரதிநிதிகள் இராணுவ பதவி நிலை பிரதானியை சந்திப்பு

இந்தியா கடற்படை கல்வியற் கல்லூரியின் தலைவர் கொமடோர் சுனில் குமார் தலைமையிலான இந்தியா உயர் பாதுகாப்பு முகாமை பாடநெறியின் ஐந்து பேர் கொண்ட பிரதிநிதி குழு, பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக ஐந்து நாள் (பெப்ரவரி 05 - 09) ஆய்வுப் பயணத்தில் திங்கட்கிழமை (பெப்ரவரி 05) இராணுவத் தலைமையகத்தில் இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டபிள்யூ எச் கே எஸ் பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ அவர்களை சந்தித்தனர்.

வருகை தந்த தூதுக்குழுவுடனான சுமுகமான உரையாடலில் இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டபிள்யூ எச் கே எஸ் பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ அவர்கள் இந்திய உயர் பாதுகாப்பு முகாமை பாடநெறியின் பாடத்திட்டம் தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதுடன் அண்டைய இராணுவ அமைப்புகளுடனான அனுபவங்களை பரிமாறிக்கொள்வதன் முக்கியத்துவத்தினை எடுத்துக் காட்டினார். மேலும் இந்திய உயர் பாதுகாப்பு முகாமை பாடநெறியில் இலங்கை அதிகாரிகளுக்கு அதிக வாய்ப்புகளை வழங்க வேண்டும் எனவும் இராணுவ பதவி நிலை பிரதானி கோரிக்கை விடுத்தார்.

சுமூகமான சந்திப்பின் முடிவில், இராணுவ பதவி நிலை பிரதானி மற்றும் கொமடோர் சுனில் குமார் ஆகியோர் நல்லெண்ணத்தின் அடையாளமாக நினைவுச் சின்னங்களை பரிமாறிக்கொண்டனர்.

பயிற்சி பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் பீகேஎஸ் நந்தன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களும் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டார்.