Header

Sri Lanka Army

Defender of the Nation

05th February 2024 19:46:03 Hours

ஜேர்மன் தூதரகத்தின் புதிய பாதுகாப்பு இணைப்பாளர் இராணுவத் தளபதியை சந்திப்பு

கொழும்பில் உள்ள ஜேர்மனிய தூதரகத்தின் புதிய பாதுகாப்பு இணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள கேணல் கிளாஸ் மேர்க்கல் மற்றும் பிரதி பாதுகாப்பு இணைப்பாளர் லெப்டினன் கேணல் ஆன்ட்ரே நீட்ஹோபர் ஆகியோர் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை 2024 பெப்ரவரி 05 இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தார்.

புதிய பாதுகாப்பு இணைப்பாளருக்கு இராணுவத் தளபதி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அவர்களின் சுமுகமான சந்திப்பின் போது, இரு தரப்பினரும் பரஸ்பர விடயங்களில் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர், இரு நாடுகளின் ஆயுதப் படைகளுக்கிடையேயான நல்லெண்ணம், ஒத்துழைப்பு மற்றும் புரிந்துணர்வு ஆகியவற்றின் நீண்டகால பிணைப்புகளை நினைவு கூர்ந்தனர்.

மேலும், இலங்கை இராணுவத்தினருக்கான பயிற்சித் திட்டங்களை மேம்படுத்துவதற்கான சாத்தியமான வழிகள் தொடர்பாக கலந்துரையாடியதுடன், இரு நாடுகளின் ஆயுதப் படைகளுக்கு இடையிலான பல்வேறு பரிமாற்ற நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவதை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்தனர்.

நல்லெண்ணத்தின் அடையாளமாக, லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, கேணல் கிளாஸ் மேர்க்கெல் மற்றும் லெப்டினன் கேணல் ஆண்ட்ரே நீட்ஹோபர் ஆகியோர் சுமுகமான சந்திப்பின் முடிவில் நினைவுச் சின்னங்களை பறிமாற்றிக்கொண்டனர்.