Header

Sri Lanka Army

Defender of the Nation

30th January 2024 18:47:30 Hours

பாதுகாப்பு பதவி நிலை பிரதானி கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் முப்படையினருக்கு உரை

பாதுகாப்பு பதவி நிலை பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ எம்பில் அவர்கள் கிழக்கின் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை வீரர்களின் பங்கு மற்றும் தொழில்முறை நடத்தையை நினைவுபடுத்தும் மற்றும் புதுப்பிக்கும் நோக்கத்துடன், கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு 28 ஜனவரி விஜயம் செய்தார்.

இதன்போது கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்கேயுபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சி ஐஜீ அவர்கள் வருகை தந்த பாதுகாப்பு பதவி நிலை பிரதானியை அன்புடன் வரவேற்றதுடன் இராணுவ சம்பிரதாயத்திற்கு இணங்க திருகோணமலை இலங்கை விமானப்படை கல்வியற்கல்லூரி (சீனக் குடா) படையினரால் வரவேற்கப்பட்டார்.

முப்படை வீரர்களுக்கு பாதுகாப்பு பதவி நிலை பிரதானி உரையாற்றுவதற்கு முன்னதாக கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி அவர் தொடர்பில் அறிமுகத்தை மேற்கொண்டார்.

படையினர் மத்தியில் உரையாற்றிய ஜெனரல் சவேந்திர சில்வா, புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் சந்தர்ப்பமாக அமைந்ததுடன், வன்னி மனிதாபிமான நடவடிக்கை உட்பட கடந்த காலங்களில் இடம்பெற்ற அனைத்துப் பணிகளிலும் கலந்துகொண்ட அனைத்து அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு பாராட்டை தெரிவித்தார். மேலும், கிழக்கில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணுவதற்குத் தொடர்ந்து சேவையாற்றி வரும் அனைத்து அதிகாரிகளையும் சிப்பாய்களையும் பாராட்டினார்.

இராணுவத்தினரின் நிபுணத்துவம், பெரும்பான்மையான பொது மக்களால் உரிய முறையில் அங்கீகரிக்கப்பட்டு மதிக்கப்பட்டுள்ளது என்று ஜெனரல் சவேந்திர சில்வா எடுத்துக் காட்டியதுடன் அனைத்து முப்படை வீரர்களும் அனைத்து நேரங்களிலும் நிபுணத்துவ ஒழுக்கம், நடத்தை மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றின் மிக உயர்ந்த தரத்தை பேணுவதை உறுதிப்படுத்துவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று மேலும் தெரிவித்தார்.

தற்போதைய செயல்பாட்டுச் சூழலின் சவால்கள் குறித்தும் பணிபுரிபவர்களுக்கு கல்வியை தேவைப்படும்போது தொடர்ந்து வழிகாட்டவும் பல்வேறு நிலைகளில் உள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

முப்படையினரின் உரை நிறைவடைந்ததையடுத்து, கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மற்றும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானி ஆகியோருக்கு இடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாற்றிக் கொள்ளப்பட்டன.

இந்த விஜயத்தின் போது, ஜெனரல் சவேந்திர சில்வா படையினருடன் கலந்துரையாடிய அவர் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் தேவைகளையும் கேட்டறிந்தார்.