Header

Sri Lanka Army

Defender of the Nation

20th January 2024 20:20:11 Hours

இலங்கை பொறியியல் படையணியின் ‘வர்ண இரவு 2024ல்’ விளையாட்டுத் திறமைகளை அங்கீகரித்து பாராட்டு

இலங்கை பொறியியல் படையணியின் மதிப்புமிக்க ‘வர்ண இரவு 2024’ விழா வெள்ளிக்கிழமை (19 ஜனவரி 2024) பனாகொட இராணுவ உடற்பயிற்சி கூடத்தில் நடைப்பெற்றது. இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். இந்நிகழ்வு பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளில் இலங்கை பொறியியல் படையணி விளையாட்டு வீர வீரங்கனைகளின் சிறப்பான சாதனைகளை அங்கீகரித்து, பாராட்டுவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.

இலங்கை பொறியியல் படையணியின் 107 விளையாட்டு வீரர்களுக்கு 24 விளையாட்டு நிகழ்வுகளை பிரதிநிதித்துவப்படுத்தி, அவர்களின் சிறந்த செயல்திறனைப் பாராட்டி வர்ணங்கள் வழங்கப்பட்டன. 2020 முதல் 2023 வரை சர்வதேச, தேசிய, பாதுகாப்பு சேவைகள் மற்றும் படையணிகளுக்கிடையிலான விளையாட்டு மற்றும் தடகள நிகழ்வுகளில் சிறந்து விளங்கிய இவர்களுக்கு இலங்கை இராணுவம் மற்றும் ஒட்டுமொத்த தேசத்திற்கும் போற்றுதலைக் கொண்டு வந்ததற்காக கொண்டாடப்பட்டனர்.

இலங்கை பொறியியல் படையணி படைத்தளபதி மேஜர் ஜெனரல் எம்கே ஜயவர்தன ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் இலங்கை பொறியியல் படையணி சிரேஷ்ட அதிகாரிகளுடன் லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களை பனாகொட இராணுவ உடற்பயிற்சி கூடத்திற்கு மரியாதையுடன் வரவேற்றனர். ஜெனரல் என்.யு.எம்.எம்.டபிள்யூ. சேனாநாயக்க (ஓய்வு) ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ யூஎஸ்ஏசிஜிஎஸ்சி மற்றும் ஓய்வுபெற்ற சிரேஷ்ட அதிகாரிகளின் பங்கேற்புடன் இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

படையணியின் கீதம் இசைக்கப்பட்டு அன்றைய நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. படையணியின் பெருமைமிக்க வரலாறு, அதன் விரிவாக்கம், படையணியின் முன்னேற்றம், படைவீரர்களின் செயல்பாடுகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் வர்ணங்கள் ஆகியவற்றை விவரிக்கும் வீடியோ ஆவணப்படம் திரையிடப்பட்டது. அதன் பின்னர் பிரிகேடியர் எஸ்.பீ.ஜி கமகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ அவர்களினால் நிகழ்வின் நோக்கங்களை விளக்கி வரவேற்பு உரை நிகழ்த்தப்பட்டது.

இராணுவத் தளபதி தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, இலங்கை பொறியியல் படையணி படைத்தளபதி மற்றும் இலங்கை பொறியியல் படையணி சிரேஷ்ட அதிகாரிகளுடன் சாதனையாளர்களுக்கு வர்ணங்களை வழங்கினார்.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களினால் இலங்கை பொறியியல் படையணியின் விளையாட்டு வீர்களிடையே ஆதரவு மற்றும் ஊக்குவிப்பின் முறையாக விளையாட்டு மற்றும் தடகள திறன்களை மேலும் மேம்படுத்துவதற்காக ஒரு மில்லியன் ரூபா ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது. இந் நன்கொடையினை இலங்கை பொறியியல் படையணி படைத்தளபதி மேஜர் ஜெனரல் எம்கே ஜயவர்தன அவர்கள் நன்றியுடன் ஏற்றுக்கொண்டதுடன் இது படையணியின் விளையாட்டுத் திறனை வளர்ப்பதற்கான அர்ப்பணிப்பைக் குறிக்கிறது.

இலங்கை பொறியியல் படையணி படைத்தளபதி மேஜர் ஜெனரல் எம்கே ஜயவர்தன அவர்கள் நிகழ்வின் வெற்றிக்கு பங்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் ஆற்றிய நன்றியுரை அன்றைய நிகழ்வுகளின் உச்சக்கட்டமாக அமைந்தது. சம்பிரதாயங்களைத் தொடர்ந்து, அனைத்து வர்ண சாதனையாளர்களும், இராணுவத் தளபதி மற்றும் சிறப்பு விருந்தினர்களுடன் ஒரு தேநீர் விருந்துபசாரத்தில் இணைந்துக் கொண்டனர். இது இலங்கை பொறியியல் படையணியின் சமூகத்திற்குள் பிணைப்புகளை மேலும் வலுப்படுத்தும் நெருக்கமான தொடர்புகளை வளர்க்கும் வகையில் அமைந்தது.