Header

Sri Lanka Army

Defender of the Nation

05th January 2024 19:56:51 Hours

ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க (ஓய்வு) அவர்கள் இராணுவத் தளபதியை சந்திப்பு

இராணுவத்தின் 22 வது தளபதியும் விசேட படையணியின் சிரேஷ்ட படைவீரர்களில் ஒருவருமான ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க (ஓய்வு) ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ யூஎஸ்ஏசிஜிஎஸ்சி அவர்கள் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை வெள்ளிக்கிழமை (05 ஜனவரி) இராணுவ தலைமையகத்தில் சந்தித்தார்.

முன்னாள் இராணுவத் தளபதியுடனான சந்திப்பின் போது இராணுவத் தளபதி அவரது பதவிக்காலத்தில் பொறுப்பான நியமனங்கள் மற்றும் இராணுவத்திற்கு வழங்கிய மதிப்புமிக்க பங்களிப்பை ஓய்வுபெற்ற சிரேஷ்ட அதிகாரியிடம் நினைவுகூர்ந்தார். வருகை தந்த சிரேஷ்ட அதிகாரி, சந்திப்பை ஏற்பாடு செய்த இராணுவத் தளபதிக்கு நன்றி தெரிவித்ததுடன், அவர் புறப்படுவதற்கு முன் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

சந்திப்பின் முடிவில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க (ஓய்வு) அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன் சிறப்பு நினைவுச் சின்னத்தையும் வழங்கினார்.