Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd January 2024 15:45:26 Hours

புத்தாண்டில் பதவி நிலை பிரதானி ராகம ரணவிரு செவனவிற்கு விஜயம்

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் சார்பாக இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டபிள்யூ எச் கே எஸ் பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ அவர்கள் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 02) ராகம ரணவிரு செவனவிற்கு விஜயத்தை மேற்கொண்டு போர் வீரர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

வருகை தந்த இராணுவ பதவி நிலை பிரதானிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து நுழைவாயிலில் போர் வீரர் ஒருவரால் அன்புடன் வரவேற்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து போர் வீரர்களுடன் கலந்துரையாடியதுடன், புத்தாண்டு பரிசுகளையும் வழங்கினார். பின்னர், போர் வீரர் ஒருவரால் இராணுவ பதவி நிலை பிரதானிக்கு சிறப்பு நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.

இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டபிள்யூ எச் கே எஸ் பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ அவர்கள் விருந்தினர் பதிவேட்டில் பாராட்டுக் குறிப்புகளையும் பதிவிட்டார்.