Header

Sri Lanka Army

Defender of the Nation

27th December 2023 19:29:02 Hours

ஓய்வுபெறும் பிரதம சமிக்ஞை அதிகாரியின் சேவைக்கு பாராட்டு

இலங்கை சமிக்ஞைப் படையணியின் ஓய்வுபெறும் பிரதம சமிக்ஞை அதிகாரியும் இலங்கை சமிக்ஞைப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் கே.ஏ.டபிள்யூ.எஸ் ரத்நாயக்க என்டியூ அவர்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் அழைப்பின் பேரில் அவரது அலுவலகத்திற்கு புதன்கிழமை (டிசம்பர் 27) அவரது குடும்ப உறுப்பினர்களுடன் வருகை தந்தார்.

இராணுவத்தில் 35 வருடங்களுக்கும் மேலான புகழ்பெற்ற சேவையின் பின்னர் ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரி, இராணுவத் தளபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது, இராணுவத் தளபதியிடமிருந்து பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் பெற்றார். இராணுவத் தளபதி அவரது அர்ப்பணிப்புமிக்க சேவைகள் மற்றும் இலங்கை சமிக்ஞைப் படையணியின் வளர்ச்சிக்கு வழங்கிய பங்களிப்பைப் பற்றி உயர்வாகப் பேசியதுடன், கடந்த கால போர் நடவடிக்கைகளின் போது நினைவுகூறத்தக்க நிகழ்வுகளை நினைவுகூர்ந்தார்.

இராணுவத் தளபதி ஓய்வு பெற்றவரின் மனைவி மற்றும் மகளுடன் சில இன்பங்களைப் பகிர்ந்து கொண்டதுடன் சில கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார். ஓய்வு பெற்றவரின் குடும்ப உறுப்பினர்கள் சமிக்ஞை நிபுணராக இரவு பகல் பாராமல், சவாலான நிலைகளில் பணியாற்ற எப்போதும் ஆதரவு அளித்ததையும் அவர் குறிப்பிடத் தவறவில்லை.

மேஜர் ஜெனரல் கே.ஏ.டபிள்யூ.எஸ் ரத்நாயக்க என்டியூ அவர்களும் இராணுவத் தளபதியின் விருப்பத்திற்கும் திறமையான வழிகாட்டலுக்கும் நன்றி தெரிவித்ததுடன், இராணுவத்தில் தனது பல்வேறு கடமைகளை நிறைவேற்றுவதில் தளபதி அவருக்கு வழங்கிய வழிகாட்டுதலுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.

சந்திப்பின் முடிவில், லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரிக்கு பாராட்டு சின்னமாக விசேட நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கியதுடன் குடும்ப உறுப்பினர்களுக்கு விசேட பரிசுகளையும் வழங்கினார்.

ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சுருக்கமான விவரம் பின்வருமாறு

மேஜர் ஜெனரல் கே.ஏ.டபிள்யூ.எஸ் ரத்நாயக்க என்டியூ அவர்கள் 1988 செப்டெம்பர் 26 இல் இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையணியில் பயிலிளவல் அதிகாரியாக தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி மற்றும் இந்திய கல்வியற் கல்லூரியின் பாடநெறி 30 இல் அடிப்படை இராணுவப் பயிற்சியைப் பெற்றதுடன் அவர் 05 ஒக்டோபர் 1990 அன்று இலங்கை சமிக்ஞைப் படையணியில் இரண்டாம் லெப்டினன் நிலையில் நியமிக்கப்பட்டார். இராணுவத்தில் பணிபுரிந்த காலப்பகுதியில் தொடர்ந்து நிலை உயர்வுகளை பெற்ற அவர், 2022 மே 18 மேஜர் ஜெனரல் நிலைக்கு நிலை உயர்தப்பட்டார்.

அவர் ஓய்வுபெறும் போது தலைமை சமிக்ஞை அதிகாரி, மற்றும் சமிக்ஞை படையணியின் படைத் தளபதி ஆகிய பதவிகளை வகிக்கின்றார். முதலாவது சமிக்ஞை படையணியின் அணி தலைவர், போர் பயிற்சி பாடசாலையின் அணி தலைவர், முதலாவது சமிக்ஞை படையணியின் உள்ளக பாதுகாப்பு பிரிவின் அணி தலைவர், முதலாவது சமிக்ஞை படையணியின் ஓ படையின் அதிகாரி கட்டளை, வடமேல் மாகாண ஆளுநரின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி, 21 வது காலாட் பிரிகேட்டின் சமிக்ஞை அதிகாரி, முதலாவது சமிக்ஞை படையணியின் நிறைவேற்று அதிகாரி, 52 வது காலாட் படைப்பிரிவின் சிரேஷ்ட புலனாய்வு அதிகாரி, கொழும்பு செயல்பாட்டுக் கட்டளையின் பொதுப் பணி அதிகாரி 3 (தொடர்புகள்), 22 வது காலாட் படைப்பிரிவின் பொது பணிநிலை அதிகாரி 3 (செயல்பாடு), 515 மற்றும் 563 வது காலாட் பிரிகேடின் பிரிகேட் மேஜர், காலி பிரதேச தலைமையகத்தின் பணிநிலை அதிகாரி 2 (நிர்வாகம்), 5 ,7 மற்றும் 2வது (தொ) சமிக்ஞை படையணிகளின் இராண்டாம் அதிகாரி கட்டளை, ஐநா அமைதி காக்கும் நடவடிக்கைகான இலங்கை பயிற்சி நிறுவனத்தின் அதிகாரி பயிற்றுவிப்பாளர், எத்தியோப்பியா மற்றும் எரித்திரியாவின் இராணுவ கண்காணிப்பாளர், சமிக்ஞை பாடசாலையின் தலைமைப் பயிற்றுவிப்பாளர், சமிக்ஞை படையணி தலைமையகத்தின் நிறைவேற்று அதிகாரி, 7 மற்றும் 9 வது சமிக்ஞை படையணி கட்டளை அதிகாரி, இராணுவத் தலைமையக தலைமை சமிக்ஞை அதிகாரி அலுவலகத்தின் பொது பணி நிலை அதிகாரி1 (மின்னணு போர்) மற்றும் பொது பணி நிலை அதிகாரி 1(தொடர்புகள்), சமிக்ஞை பாடசாலையின் தளபதி, சமிக்ஞை படையணி தலைமையகத்தின் பிரதி நிலைய தளபதி, 213 வது காலாட் பிரிகேட்டின் பதில் தளபதி, முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகம் மற்றும் மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொதுப் பணி, கிழக்கு மற்றும் மத்திய முன்னரங்கு பராமரிப்பு பிரிவின் தளபதி ஆகிய பதவிகளையும் வகித்துள்ளார்.

அவர் அணித் தலைவர் தந்திரோபாய பாடநெறி, அணி தளபதி பாடநெறி, படையலகு பாதுகாப்பு அதிகாரி பாடநெறி, படையலகு கணக்கியல் அதிகாரி பாடநெறி, அடிப்படை கணினி பாடநெறி, புலனாய்வு மற்றும் கள பாதுகாப்பு பாடநெறி, அதிகாரிகளின் செயல்பாட்டு பணிநிலை கடமைகள் பாடநெறி, அதிகாரி சிறப்பு தேர்ச்சி பாடநெறி, இராணுவ கண்காணிப்பாளர்கள் மற்றும் பணிநிலை அதிகாரிகள் பாடநெறி, தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் பாடநெறி, கனிஷ்ட கட்டளை பாடநெறி, சமிக்ஞை அதிகாரிகள் அடிப்படை பாடநெறி - பங்களாதேஷ், சமிக்ஞை குழு தலைவர்கள் பாடநெறி - இந்தியா, சிரேஷ்ட கட்டளை பாடநெறி - இந்தியா மற்றும் தேசிய பாதுகாப்பு மற்றும் போர் பாடநெறி - பாகிஸ்தான் போன்ற பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பட்ட படிப்புகளையும் இராணுவ வாழ்க்கையில் பயின்றுள்ளார்.

சிரேஷ்ட அதிகாரி, இலங்கை நிறுவனத்தில் அரசியல் கோட்பாடு மற்றும் நடைமுறை பாடநெறி, பேராதனை பல்கலைக்கழகத்தில் ஜீஐஎஸ் மற்றும் முறைமை பாடநெறி, இலங்கை அபிவிருத்தி நிர்வாகத்திற்கான நிறுவனத்தில் பொது முகாமைத்துவத்தில் பட்டப்பின் படிப்பு டிப்ளோமா, இலங்கை நிறுவனத்தில் ஆலோசணை தொடர்பில் தேசிய டிப்ளோமா, இந்தியாவின் தேவி அஹில்யா விஸ்வ வித்யாலயாத்தில் சிரேஷ்ட நிலை பாதுகாப்பு முகாமை டிப்ளோமா, சுவிட்சர்லாந்து கிரிப்டோ பயிற்சி மையத்தில் மொத்த தகவல் பாதுகாப்பு டிப்ளோமா, ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்ப டிப்ளோமா, ஐக்கிய இராச்சியம் கார்டிப் மெட்ரோபொலிட்டன் பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகம் முதுமானி, பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் தேசிய பாதுகாப்பு மற்றும் போர் பாடநெறியில் முதுகலை, இலங்கை அபிவிருத்தி நிர்வாகத்திற்கான நிறுவனத்தில் பொது முகாமைத்துவத்தில் முதுமானி, கொழும்பு பல்கலைக்கழகத்தில் மோதல் மற்றும் சமாதான ஆய்வுகளில் முதுகலைப் பட்டம் மற்றும் தேசிய பயிலுனர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபையால் வழங்கப்பட்ட இலங்கை கணினி திறன் உரிமம் போன்ற பல இராணுவ சாராத உயர் கல்வி மற்றும் பாடநெறிகளையும் பின்பற்றியுள்ளார்.