Header

Sri Lanka Army

Defender of the Nation

27th December 2023 19:48:15 Hours

தளபதி பிரிகேடியர் எதிரிசிங்கவுக்கு இறுதி மரியாதை

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் செவ்வாய்க்கிழமை (26) மறைந்த இராணுவ பொறியியல் சேவைகள் படையணியின் பிரிகேடியர் ஈ.ஏ.டி.கே எதிரிசிங்க அவரது இல்லமான இல - 974/80சி, இடமல்வத்தை வீதி, அன்னாசிவத்தை, அத்துருகிரியவிற்கு சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார்.

பிரிகேடியர் ஈ.ஏ.டி.கே எதிரிசிங்க அவர்கள் (52) வயதில் ஞாயிற்றுக்கிழமை (24) மாலை கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் காலமானார்.

லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் மறைந்த சிரேஷ்ட அதிகாரியின் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்ததுடன், சிரேஷ்ட அதிகாரியின் அகால மரணம் குறித்து ஆழ்ந்த வருத்தத்தையும் தெரிவித்தார். இராணுவத் தளபதி மறைந்த சிரேஷ்ட அதிகாரியின் அர்ப்பணிப்பு தனது கடமைகளை சிறந்த முறையில் ஆற்றினார் என்பதையும் நினைவு கூர்ந்தார்.

பிரிகேடியர் ஈ.ஏ.டி.கே எதிரிசிங்க அவர்களின் இறுதிக்கிரியைகள் பூரண இராணுவ மரியாதையுடன் புதன்கிழமை (27) பொரளை பொது மயானத்தில் இடம்பெற்றது.