23rd December 2023 18:09:34 Hours
இராணுவ தகவல் தொழில்நுட்ப பணிப்பகத்தினால் வேகமாக வளர்ந்து வரும் இணைய தொழில்நுட்பம் மற்றும் பல்வேறு தளங்களைத் தெரிந்துகொள்ள தனது சமீபத்திய, புதுமையான பயன்பாடுகளின் செயல்விளக்கமான 'பிங்கர் ஸ்விப்ட் 2023' திட்டத்தை வெள்ளிக்கிழமை (டிசம்பர் 22) இராணுவ தலைமையகத்தில், நிகழ்வின் பிரதம அதிதியான இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் முன்னிலையில் வெளியிட்டது.
'பிங்கர் ஸ்விப்ட் 2023', இலங்கை இராணுவ தகவல் தொழில்நுட்ப பணிப்பகத்தின் அதிகாரிகளால் நுட்பமாக உருவாக்கப்பட்டு, புதுமையான தகவல் தொழில்நுட்ப மென்பொருள் அபிவிருத்தி தீர்வுகள் மற்றும் பல்வேறு தகவல் தொழில்நுட்ப பயன்பாடுகளின் விரிந்த மற்றும் ஆழத்தை வெளிப்படுத்தும் வகையில் உன்னிப்பாக வடிவமைக்கப்பட்ட ஒரு விரிவான மேடையாக செயல்படுகிறது.
பிரதம சமிக்ஞை அதிகாரியும் இராணுவ சமிக்ஞை படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் கே.ஏ.டபிள்யூ.எஸ் ரத்நாயக்க என்டியூ அவர்களின் தலைமையில், இராணுவத்தின் தற்போதைய தகவல் தொழில்நுட்பத் தரம் குறித்த வீடியோ காட்சி திரையிடப்பட்டதுடன், வரவேற்பு உரையின் போது பார்வையாளர்களுக்கு இத்திட்டம் குறித்து தெளிவுபடுத்தினார்.
அண்மையில் புதிதாக வடிவமைக்கப்பட்ட இராணுவ டிஜிட்டல் தொடர்பு தளம் (ஏடிசிபீ - இராணுவ கடித தொடர்பு அமைப்பின் புதிய விரிவாக்கம்), மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பகத்தின் முகாமை அமைப்பு, ஆயுதங்கள் மற்றும் படையினர் போக்குவரத்து பணிப்பகத்தின் முகாமை அமைப்பு, மற்றும் இராணுவ டிஜிட்டல் நிகழ்வு நிரல் ஆகிய நான்கு தகவல் தொழில்நுட்ப பயன்பாடுகள் பற்றிய வீடியோக்கள் கூட்டத்தின் முன் வெளியிடப்பட்டன.
தொடர்ந்து, தகவல் தொழில்நுட்பம் தொடர்பின் புதிய அத்தியாயத்தை உருவாக்கும் புதிய முறைமைகளை அறிமுகப்படுத்த இராணுவத் தளபதி அழைக்கப்பட்டார். அதன்பின், இரண்டு இணையப் பாதுகாப்பு செயல் விளக்கங்கள் இணையப் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்த அறிவை வழங்கியதுடன், அதே நேரத்தில் புதிய இணையப் பாதுகாப்பு வினாவிடை இணையதளம், புதிதாக வடிவமைக்கப்பட்ட மாதாந்த இணைய பாதுகாப்பு அறிக்கைத் தாள் தொடங்கப்பட்டன.
இலங்கை தகவல் தொழில்நுட்ப தொழில் கூட்டமைப்பின் தலைவர் திரு இந்திக டி சொய்சா அவர்கள் சிறப்பு பேச்சாளராக, 'Digiecon 2030' உடன் தொடர்புடைய நாட்டின் தகவல் தொழில்நுட்ப சாலை வரைபடமான 'Digiecon 2030' பற்றிய காட்சிகளைப் பகிர்ந்து கொண்டார். இராணுவ தகவல் தொழில்நுட்ப சாலை வரைபடம் 2030 பின்னர் அறிமுகப்படுத்தப்பட்டது. மற்றும் அச்சிடப்பட்ட பிரதிகள் அழைப்பாளர்களுக்கு வழங்கப்பட்டன.
அதன் பின்னர், இராணுவத் தளபதி திரு இந்திக டி சொய்சா அவர்களின் பங்களிப்பைப் பாராட்டி அவருக்கு விசேட நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கியதுடன், தகவல் தொழில்நுட்ப பணிப்பகத்தின் 27 அதிகாரிகளுக்கு இராணுவத் தளபதி பாராட்டு மற்றும் அடையாள சான்றிதழ்களை வழங்கினார்.
இறுதியில், பிரதம சமிக்ஞை அதிகாரி அவர்களினால் வெற்றிகரமான தகவல் தொழில்நுட்ப பயன்பாடுகளை வடிவமைக்கும் போது வழங்கப்பட்ட வழிகாட்டுதலைப் பாராட்டி இராணுவத் தளபதிக்கு சிறப்பு நினைவுச் சின்னத்தை வழங்கினார். இராணுவ தகவல் தொழில்நுட்ப பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் எச்.டி.ஜே.பீ வீரதுங்க அவர்கள் நன்றியுரை ஆற்றினார். தகவல் தொழில்நுட்ப பணிப்பகத்தினால் அழைக்கப்பட்டவர்கள் மற்றும் அதிகாரிகளின் குழுவின் புகைப்படம் அன்றைய நிகழ்ச்சி நிரலை உச்சத்திற்கு கொண்டு வந்தது.
இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டபிள்யூ.எச்.கே.எஸ் பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ, முதன்மைப் பணிநிலை அதிகாரிகள், பணிப்பாளர்கள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் அன்றைய ‘பிங்கர் ஸ்விப்ட் 2023’ வெளியீட்டு நிகழ்ச்சியைக் கண்டுகளித்தனர்.