Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd December 2023 18:12:31 Hours

புதிய பதவி நிலை பிரதானி இராணுவத் தளபதியை சந்திப்பு

புதிய பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டபிள்யூ எச் கே எஸ் பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ அவர்கள் புதன்கிழமை (20) பதவியேற்றதை தொடர்ந்து வெள்ளிக்கிழமை (டிசம்பர் 22) இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களை தளபதி அலுவலகத்தில் முதல் முறையாக சந்தித்தார்.

இராணுவத் தளபதி இராணுவத்தின் புதிய இரண்டாம் நிலைத் தளபதிக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், கலந்துரையாடல்களின் போது பதவி நிலை பிரதானியின் பொறுப்புகள் தொடர்பாக கருத்துக்களை பரிமாறிக் கொண்டார்.

புதிய அலுவலகத்தில் அவரது எதிர்கால நிகழ்ச்சிகளுக்கு ஊக்கம் அளித்த இராணுவத் தளபதி, தனது முழுத் திறமையுடன் கடமைகளை நிறைவேற்றுமாறு கேட்டுக் கொண்டார்.