Header

Sri Lanka Army

Defender of the Nation

12th December 2023 08:11:00 Hours

இந்திய இராணுவ கல்வியற் கல்லூரியில் 04 இலங்கை இராணுவ பயிளிலவல் அதிகாரிகள் விடுகை

இந்தியாவின் புது டெல்லியில் உள்ள டெஹ்ராடூனில் உள்ள இந்திய இராணுவ கல்வியற் கல்லூரியில் 153 ஆம் இலக்க பாடநெறியின் 329 பயிலிளவல் அதிகாரிகளில் நான்கு இலங்கை இராணுவ பயிளிலவல் அதிகாரிகளின் விடுகை அணிவகுப்பில் இந்திய இராணுவ கல்வியற்க ல்லூரியின் தளபதி லெப்டினன் ஜெனரல் விஜயகுமார் மிஸ்ரா ஏவீஎஸ்எம் அவர்களின அழைப்பின் பேரில் பிரதம அதிதியாக பாதுகாப்பு பதவி நிலை பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ அவர்கள் கலந்து கொண்டார்.

இந்திய இராணுவ கல்வியற் கல்லூரி பாடநெறி -153 இல் இலங்கை, ஆப்கானிஸ்தான், சூடான், நேபாளம், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பங்களாதேஷ், அமெரிக்கா, பூட்டான், கென்யா, காங்கோ மற்றும் மாலைத்தீவுகள் உள்ளிட்ட வெளிநாட்டு பயிலிளவல் அதிகாரிகள் உட்பட 329 பயிலிளவல் அதிகாரிகள் பயிற்சிபெற்றனர். அவர்களில் 04 இலங்கை பயிலிளவல் அதிகாரிகள் பாடநெறி 89 மற்றும் இந்திய இராணுவ கல்வியற் கல்லூரி பாடநெறி 92 பயிற்சியை நிறைவுசெய்த அதிகாரிகள் பிற நாட்டில் தமது பாடநெறியினை நிறைவு செய்து தமது அதிகார சின்னங்களை தமது நாட்டின் பாதுகாப்பு பதவி நிலை பிரதானி அவர்களிடமிருந்து பெறும் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வினை சனிக்கிழமை (9) அன்று பெற்றனர்.

ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் நல்லுறவு மற்றும் தொழில்முறை உறவுகளை அறிந்து கொண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையாக இந்திய இராணுவத்திற்கு அதிக எண்ணிக்கையிலான திறமையான மற்றும் தேசபக்தி அதிகாரிகளை விடுவிக்கும் நிகழ்விற்கு அன்றை பிரதம அதிதி அவர்களை வரவேற்கும் நிகழ்வில் இந்திய இராணுவத்தின் மேற்குக் தளபதி லெப்டினன் ஜெனரல் மனோஜ் குமார் கட்டியார் ஏவிஎஸ்எம் மற்றும் இந்திய இராணுவ கல்வியற் கல்லூரி தளபதி லெப்டினன் ஜெனரல் விஜய் குமார் மிஸ்ரா ஏவிஎஸ்எம் ஆகியோர் பங்குபற்றினர்.

சிறிது காலத்திற்குப் பிறகு இந்திய இராணுவ கல்வியற் கல்லூரியில் உட்பட இந்தியாவில் பல பாடநெறிகளை முடித்த ஜெனரல் ஷவேந்திர சில்வா, இந்திய இராணுவத்தின் மேற்குக் கட்டளை தளபதி மற்றும் இந்திய இராணுவ கல்வியற் கல்லூரி தளபதி ஆகியோரால் சம்பிரதாயபூர்வமாக பயிலிளவல் அதிகாரிகளின் மரியாதைகளுக்கு மத்தியில் சிறப்பு மேடைக்கு அழைத்து செல்லப்பட்டார். அன்றைய தினத்தின் பிரதம அதிதி பாதுகாக்கப்பட்ட இந்திய இராணுவ கல்வியற் கல்லூரி மரபுகளுக்கு இணங்க சிறப்பு வாகனத்தில் ஏறி அணிவகுப்புத் தளபதியுடன் அணிவகுப்பை மதிப்பாய்வு செய்தார்.

சிறந்த பயிலிளவல் அதிகாரிக்கான விருது உட்பட சிறப்பாகச் செயற்பட்ட பயிலிளவல் அதிகாரிகளுக்கான விசேட விருதுகளை வழங்குவதற்கும் ஜெனரல் ஷவேந்திர சில்வா அழைக்கப்பட்டார். அதன்பின், புதிதாகத் தேர்ச்சி பெற்ற பயிலிளவல் அதிகாரி மற்றும் பெருந்திரளான மக்கள் மத்தியில் உரையாற்றுவதற்கு பிரதம விருந்தினர் அழைக்கப்பட்டார்.

அவர் தனது உரையில், அவர்களின் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்திற்கான பயணத்தைத் தொடங்குவதற்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார், அதே நேரத்தில் உண்மையான தலைமையின் சாராம்சத்தில் விலைமதிப்பற்ற நுண்ணறிவுகளாக திரட்டப்பட்ட இராணுவப் பயிற்சிகள் மற்றும் தொழில்முறையின் முன்மாதிரியான வெளிப்பாட்டிற்காக அவர்களைப் பாராட்டினார். அண்டை நாட்டிலிருந்து சிரேஷ்ட பாதுகாப்பு பதவி நிலை பிரதானியாக ஒருவரின் அணிக்கான அக்கறை, வெற்றியைப் பகிர்வதன் முக்கியத்துவம் மற்றும் சவால்கள் மற்றும் தோல்விகள் ஆகியவற்றின் கொள்கைகளை வலியுறுத்தியதுடன் மேலும் நேர்மையான பயிலிளவல் அதிகாரியாக இருக்க வேண்டும் என்று கூறி அவர்களை ஊக்கப்படுத்தினார். சவால்கள் இருந்த போதிலும் அடையாளம், பொறுப்புகள் மற்றும் கடமைகளின் மதிப்பை எப்போதும் நன்கு அறிந்திருங்கள் என கூறினார்.

உலகத் தரம் வாய்ந்த வசதிகளுடன் கூடிய உயர்ந்த பயிற்சித் தரங்களைத் தொடர்ந்து நிலைநிறுத்தி, உலக அளவில் சமகாலப் படைகளுக்குள் இணையற்றதாக மாற்றியமைக்கும் இந்திய இராணுவ கல்வியற் கல்லூரி தளபதி மற்றும் நிறுவனத்தை அவர் பாராட்டினார். இராணுவ வீரர்களின் மகத்துவம் ஆண்டுக்கணக்கான சேவை அல்லது பதவியால் அளவிடப்படுவதில்லை, மாறாக அவர்கள் தங்கள் தேசம் மற்றும் அதன் மக்களின் முன்னேற்றத்திற்காக செய்யத் தயாராக இருக்கும் தியாகங்களால் அளவிடப்படுகிறது என்றும் அவர் வலியுறுத்தினார்.

நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எஸ்ஆர்பி அலுவிஹார ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ மற்றும் இந்தியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் அமைச்சர் ஆலோசகர் (பாதுகாப்பு) அவர்களும் இந் நிகழ்வில் பங்குபற்றினார்.

பின்வரும் இலங்கை பயிலிளவல் அதிகாரிகள் தங்கள் பயிற்சியை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு விடுகை அணிவகுப்பில் கலந்துக்கொண்டனர்.

பயிலிளவல் அதிகாரி ஐஎச்எம்கே ஹேரத் – பாடநெறி 89
பயிலிளவல் அதிகாரி என்சிஎஸ்டி டயஸ் - பாடநெறி 89
பயிலிளவல் அதிகாரி ஆர்பிகேபி ஜயதிலக்க – பாடநெறி 92
பயிலிளவல் அதிகாரி ஏஜீஎஸ்எம் ஜயசுந்தர – பாடநெறி 92