Header

Sri Lanka Army

Defender of the Nation

17th November 2023 16:43:00 Hours

ஓய்வுபெற்ற சிரேஷ்ட அதிகாரி எழுதிய நூலின் பிரதி இராணுவத் தளபதிக்கு வழங்கல்

மேஜர் ஜெனரல் டி.ஜி. ஹேவகே (ஓய்வு) ஆர்எஸ்பீ அவர்கள் வியாழக்கிழமை (நவம்பர் 16) தனது “தெபரமுனக சட்டான்” (இரு முன்னணி போர்கள்) என்ற நூலின் பிரதியை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களுக்கு வழங்கினார்.

மேஜர் ஜெனரல் டி.ஜி ஹெவகே (ஓய்வு) ஆர்எஸ்பீ எழுதிய நூல், மே 2009 க்கு முன்னர் பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் இறுதியில் ஆசிரியரின் குறிப்பிடத்தக்க அனுபவங்கள் மற்றும் தடயங்களை ஆவணப்படுத்துகிறது. மேலும், இது போர் வீரர்களின் துணிச்சல் மற்றும் தைரியத்தின் மரியாதையும் விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து தாய்நாட்டை விடுவிப்பதற்கான பங்களிப்பையும் எடுத்து காட்டுகின்றது.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் அவரது பணியையும் அவரது விடாமுயற்சியைப் பாராட்டியதுடன், அவரது திட்டத்திற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.