Header

Sri Lanka Army

Defender of the Nation

15th November 2023 10:20:48 Hours

ஓய்வுபெறும் மேஜர் ஜெனரல் ஆர் எல்விட்டிகல அவர்களின் சேவைக்கு பாராட்டு

பாதுகாப்பு அமைச்சின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஆர் எல்விட்டிகல யூஎஸ்பீ அவர்கள் 34 வருடகால பணியின் பின்னர் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர் இன்று (நவம்பர் 14) பிற்பகல் குடும்ப உறுப்பினர்களுடன் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை சந்தித்தார்.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியுடனான சந்திப்பின் போது, அவரது அயராத அர்ப்பணிப்புகளின் நினைவுகள் மற்றும் குறிப்பிடத்தக்க சாதனைகளுக்காக அவரைப் பாராட்டினார். சமிக்ஞை அதிகாரியாக அமைப்பின் பல்வேறு தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் ஏனைய நடைமுறைத் தேவைகளை மேம்படுத்த அவர் மேற்கொண்ட திறமைகள் மற்றும் முயற்சிகள் தொடர்பாக இராணுவத் தளபதி உயர்வாகப் கருத்து தெரிவித்தார்.

மேஜர் ஜெனரல் ஆர் எல்விட்டிகல யூஎஸ்பீ அவர்கள் இராணுவத் தளபதியின் அன்பான அழைப்புக்கு நன்றி தெரிவித்ததுடன், இராணுவத்தில் தனது பல்வேறு கடமைகளை நிறைவேற்றுவதில் தளபதி அவருக்கு வழங்கிய வழிகாட்டுதலுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.

இந்த நிகழ்விற்கு அழைக்கப்பட்ட அவரது குடும்ப உறுப்பினர்களுடன் சில இன்பங்களைப் பகிர்ந்து கொண்ட இராணுவத் தளபதி, ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் எதிர்கால முயற்சிகள் மற்றும் திட்டங்களையும் வினாவினார். இராணுவத் தளபதி சிரேஷ்ட அதிகாரிக்கு அவரது குடும்ப உறுப்பினர்களால் அவரது வாழ்க்கை முழுவதும் வழங்கப்பட்ட விலைமதிப்பற்ற ஆதரவைப் பாராட்டினார்.

சந்திப்பின் முடிவில், லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரிக்கு பாராட்டு சின்னமாக விசேட நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கியதுடன் குடும்ப உறுப்பினர்களுக்கு விசேட பரிசுகளையும் வழங்கினார்.

ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சுருக்கமான விவரம் பின்வருமாறு

மேஜர் ஜெனரல் ஆர் எல்விட்டிகல யூஎஸ்பீ அவர்கள் 1989 ஜனவரி 20 இல் இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையணியில் பயிலிளவல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார் மற்றும் தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி மற்றும் இந்திய கல்வியற் கல்லூரியின் பாடநெறி 31 ஏ இல் அடிப்படை இராணுவப் பயிற்சியைப் பெற்றார். அவர் 1991 ஏப்ரல் 05 அன்று இரண்டாம் லெப்டினன் நிலையில் இலங்கை சமிக்ஞைப் படையணியில் நியமிக்கப்பட்டார். இராணுவத்தில் பணிபுரிந்த காலப்பகுதியில் தொடர்ந்து நிலை உயர்வுகளை பெற்ற அவர், 2023 ஒக்டோபர் 10 அவர் மேஜர் ஜெனரல் நிலையில் நிலை உயர்தப்பட்டார்.

அவர் ஓய்வுபெறும் போது பாதுகாப்பு அமைச்சின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் பணிப்பாளர் நாயகமாக பதவி வகித்து வருகிறார். அவர் கட்டளையாளர் முதலாம் சமிக்ஞை படையணி, , சமிக்ஞை படையணி பயிற்சி பாடசாலையின் பயிற்சி அதிகாரி, அணி கட்டளையாளர் முதலாம் சமிக்ஞை படையணி, இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி பயிலிளவல் அதிகாரிகள் பிரிவு, அதிகாரி பயிற்றுவிப்பாளர், முதலாம் சமிக்ஞை படையணி நிறைவேற்று அதிகாரி, இராணுவத் தலைமையக இலத்திரன்வியல் பிரிவு கட்டளை அதிகாரி, ஐ.நா ஹைட்டி இரண்டாம் கட்டளைத் அதிகாரி, இராணுவத் தலைமையக செயல்பாட்டு பணி நிலை அதிகாரி 1, 1 வது மற்றும் 7வது சமிக்ஞை படையணியின் கட்டளை அதிகாரி, சமிக்ஞை படையணி பயிற்சி பாடசாலையின் தளபதியும், சமிக்ஞை அதிகாரியின் அலுவலகத்தின், தலைமை சமிக்ஞை அதிகாரி காரியாலய பணி நிலை அதிகாரி 1, தலைமை சமிக்ஞை அதிகாரி காரியாலய கேணல் ஒருங்கிணைப்பு, தலைமை சமிக்ஞை அதிகாரி பிரதான ஒருங்கிணைப்பு அதிகாரி,பாதுகாப்பு அமைச்சு ஆய்வு மற்றும் அபிவிருத்தி,முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக கேணல் (பொதுப் பணி), 233 வது காலாட் பிரிகேட் தளபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் அனர்த ஆய்வு நிலைய பணிப்பாளர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.

தனது இராணுவ வாழ்க்கையில் பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாடநெறிகளையும் பின்பற்றியுள்ள அவர் அணி கட்டளை தந்திரோபாயப் பாடநெறி, மோட்டார் போக்குவரத்து அதிகாரிகள் பாடநெறி, அடிப்படை குறிபார்த்து சுடல், படையலகு கணக்கியல் அதிகாரிகள் பாடநெறி, அடிப்படை புலனாய்வு பாடநெறி, படையலகு நிர்வாகப் பாடநெறி, அடிப்படை பாதுகாப்பு பாடநெறி, கனிஷ்ட கட்டளை பாடநெறி, சிரேஷ்ட கட்டளை பாடநெறி, இந்தியா சமிக்ஞை இளம் அதிகாரி பாடநெறி மற்றும் பாகிஸ்தான் மத்திய தொழிலான்மை பாடநெறி போன்ற பாடநெறிகளை பின்பற்றினார். ஆர்தர் சி கிளார்க் நிறுவனத்தின் நவினதெழிற் நுற்பம் ஆலோசனை போன்ற இராணுவ அல்லாத பாடநெறிகளையும் பின்பற்றியுள்ளார்.