Header

Sri Lanka Army

Defender of the Nation

07th November 2023 08:03:58 Hours

தேசிய பாதுகாப்பு கல்லூரியின் விருந்தினர் விரிவுரைக்கு தளபதிக்கு அழைப்பு

இலங்கையின் முப்படைகள் மற்றும் பொலிஸாரின் மிக உயர்ந்த கற்றல் நிறுவனமான கொழும்பு 3 தேசிய பாதுகாப்பு கல்லூரியில் இன்று (06) தேசிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் பாடநெறி இல 2 இன் மாணவ அதிகாரிகளுக்கு 'தளபதி உரை' இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களினால் வழங்கப்பட்டது.

'தேசிய பாதுகாப்பு மற்றும் புதிய சவால்களை எதிர்கொள்வதற்கான மாற்றம்' என்ற கருப்பொருளில் இடம்பெற்ற இந்த விரிவுரையானது, சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கை இராணுவத்தின் பாதுகாப்பு சவால்கள் மற்றும் பிரச்சினைகள், நிலவும் அச்சுறுத்தல்கள், பாதுகாப்பு பிரச்சினைகள் மற்றும் அச்சுறுத்தல்களின் பன்முகத்தன்மையை உள்ளடக்கியிருந்தது, மேலும் அதிகாரிகளுக்கு கேள்விகள் மற்றும் தெளிவுபடுத்தல்கள் மூலம் விரிவுரையாளருடன் தொடர்பு கொள்ள இடமளிக்கப்பட்டது.

தேசிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் பாடநெறி எண் 2 பயிற்சியில் இராணுவம் (15), கடற்படையின் (8), விமானப்படை (7) மற்றும் பொலிஸ் (6) அதிகாரிகள் உள்ளனர்.

தேசிய பாதுகாப்பு கல்லூரி தளபதி மேஜர் ஜெனரல் டிஜிஎஸ் செனரத் யாப்பா (ஓய்வு) ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களினால் இராணுவத் தளபதியை அன்புடன் வரவேற்றதுடன், தேசிய பாதுகாப்பு கல்லூரியின் செயலாளர் மேஜர் ஜெனரல் எச்எச்கேஎஸ்எஸ் ஹேவகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்களினால் பார்வையாளர்களுக்கு அன்றைய விரிவுரை தொடர்பில் அறிமுக உரை நடாத்தப்பட்டது. அன்றைய விரிவுரையின் முடிவில், தளபதி அனைத்து அதிகாரிகளுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இராணுவத் தளபதிக்கு தேசிய பாதுகாப்பு கல்லூரியின் தளபதி அவர்களால் நினைவுச் சின்னம் வழங்கப்பட்டதுடன், இராணுவத் தளபதி தேசிய பாதுகாப்பு கல்லூரி விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் சில பாராட்டுக் குறிப்புகளையும் பதிவு செய்தார்.

தேசிய பாதுகாப்புக் கல்லூரி, முப்படைகள், பொலிஸார் மற்றும் பொதுச் சேவையின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு தேசிய பாதுகாப்பு துறையில் உயர் தகுதி வாய்ந்த மூலோபாய முடிவெடுப்பவர்களை உருவாக்குவதற்கான முழுமையான அறிவை வழங்குவதற்கான மூலோபாய சிந்தனையை ஊக்குவிக்கும் முதன்மையான நிறுவனமாக நிறுவப்பட்டது. இலங்கையின் தேசிய பாதுகாப்பு தேவைகள் மற்றும் தேசிய அபிவிருத்தியை உறுதிப்படுத்தும் வகையில் இராஜதந்திரம் மற்றும் பொதுக் கொள்கை, மூலோபாய சிந்தனையாளர்கள், மூலோபாய ஆய்வாளர்கள், தீர்மானமெடுப்பவர்கள் மற்றும் மூலோபாய ஆலோசகர்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நிறுவனம் தேசிய மற்றும் சர்வதேச பாதுகாப்பு விடயங்களில் அரசாங்கத்திற்கு புத்திசாலித்தனமான ஆலோசனையை வழங்கும் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயங்களில் சிந்தனைக் குழுவாகவும் செயல்படும். நாட்டின் தேசிய பாதுகாப்புக் கண்ணோட்டத்தை வடிவமைப்பதில் மிக முக்கியமான நிலையை இது வகிக்கிறது.