Header

Sri Lanka Army

Defender of the Nation

27th October 2023 09:38:52 Hours

ஓய்வு பெறும் பிரதி பதவி நிலை பிரதானி இராணுவ தளபதியை சந்திப்பு

கஜபா படையணியின் சிரேஷ்ட அதிகாரியான இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் சீடி ரணசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் ஓய்வு பெற்றுசெல்லும் முன் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை வியாழக்கிழமை (26) காலை, சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுகொண்டார்.

மூன்று தசாப்தங்களுக்கும் மேலான பெருமைமிக்க சேவையின் பின்னர் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களால் இராணுவத்தின் பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் சீடி ரணசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களை சேவையில் இருந்து ஓய்வுபெறும் சில நாட்களுக்கு முன்னர் அவரது குடும்ப உறுப்பினர்களுடன் அவரது அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.

இந்த சந்திப்பின் போது 36 வருடங்களுக்கு மேலாக கஜபா படையணியின் உறுப்பினராக இராணுவத்தில் முன்மாதிரியான முறையில் சேவையாற்றிய பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் சீடி ரணசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் இராணுவத் தளபதியிடமிருந்து பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் பெற்றார். மே 2009 க்கு முன்னர் மிக உயர்ந்த திறன் கொண்ட காலாட்படை அதிகாரியாக பயங்கரவாதத்திற்கு எதிரான இறுதி போரின் போது ஓய்வு பெறுபவரின் பங்களிப்பு மற்றும் மதிப்புமிக்க பாத்திரங்கள் பற்றிய நினைவுகளை இராணுவத் தளபதி நினைவு கூர்ந்தார்.

ஓய்வுபெறும் மேஜர் ஜெனரல் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுடன் சில இன்பங்களைப் பகிர்ந்துகொண்ட இராணுவத் தளபதி, ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் எதிர்கால முயற்சிகள் குறித்தும் கேட்டறிந்து அவருக்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்துகொண்டார். கடமை தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியில் இருக்க வேண்டியிருந்த சந்தர்ப்பங்களில், தனது தொழில் வாழ்க்கையின் போது அவரது குடும்ப உறுப்பினர்கள் அவருக்கு அளித்த ஆதரவைப் பாராட்டினார்.

மேஜர் ஜெனரல் சி.டி. ரணசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களும் இராணுவத் தளபதியின் அன்பான வாழ்த்துக்களுக்கும் வழிகாட்டுதலுக்கும் நன்றி தெரிவித்தார்.

சந்திப்பின் முடிவில், லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் ஓய்வு பெறுபவருக்கு பாராட்டு சின்னத்தையும், குடும்ப உறுப்பினர்களுக்கு சிறப்பு பரிசும் வழங்கினார்.

மேஜர் ஜெனரல் சி.டி. ரணசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் 16 மார்ச் 1987 இல் இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையணியில் பயிலிளவல் அதிகாரியாக இணைந்துகொண்டார். தியத்தலாவ - இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் பாடநெறி 27 இல் இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த அவர் இரண்டாம் லெப்டினனாக கஜபா படையணியில் 10 டிசம்பர் 1988 அன்று நியமிக்கப்பட்டார். இராணுவத்தில் பணிபுரிந்த காலப்பகுதியில் தொடர்ந்து அடுத்தடுத்த பதவிகளுக்கு உயர்த்தப்பட்ட பின்னர், 01 ஒக்டோபர் 2020 அன்று மேஜர் ஜெனரல் நிலைக்கு உயர்த்தப்பட்டார்.

அவர் ஓய்வுபெறுகையில் இலங்கை இராணுவத்தின் பிரதிப் பதவி நிலை பிரதானியாக பதவி வகிப்பதுடன். கஜபா படையலகு குழு அதிகாரி, 3 வது கஜபா படையணி அதிகாரி கட்ளை, காலாட் படை பயிற்சி நிலைய அதிகாரி பயிற்றுவிப்பாளர், 16 வது கஜபா இரண்டாம் கட்டளை அதிகாரி, காலாட் பயிற்சி நிலைய பணிநிலை அதிகாரி 2 (வழங்கல்), 524 வது காலாட் பிரிகேட்டின் பிரிகேட் மேஜர், அனுராதபுரம் இடைநிலை முகாமின் பணிநில அதிகாரி 2, 14 வது கஜபா கட்டளை அதிகாரி, ஓமந்தை நுழைவு/வெளியேற்றம் துறைத் தளபதி, இனை சேவ மொழிப் பயிற்சி நிலைய பணிநிலை அதிகாரி 1, 64 வது காலாட் பிரிகேட் கேணல் (பொது பணி), 652 வது காலாட் பிரிகேட் தளபதி, 11 வது காலாட் படைப்பிரிவு கேணல் (நிர்வாகம் மற்றும் விடுதி), 662 மற்றும் 532 வது காலாட் பிரிகேட்களின் தளபதி, காலாட் படை பயிற்சி நிலைய தளபதி, 23 வது காலாட் படைப்பிரிவு தளபதி, மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரி, 58 வது காலாட் படைப்பிரிவு தளபதி, வன்னி பாதுகாப்பு படைத் தமையக தளபதி, இலங்கை இராணுவ மகளிர் படையணி படைத் தளபதி, காலாட் படை பணிப்பக பதில் பணிப்பாளர் நாயகம் மற்றும் இராணுவ பதவி நிலை பிரதானி ஆகிய பதவிகளையும் வகித்துள்ளார்.

போர்க்களங்களில் அவரது வீரம் மற்றும் துணிச்சலுக்காக, அவருக்கு ‘ரண விக்கிரம பதக்கம்’ மற்றும் ‘ரண சூரபதக்கம்’ என்பன வழங்கப்பட்டுள்ளன.

மேஜர் ஜெனரல் சி.டி ரணசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் தனது இராணுவ வாழ்க்கையில் பீரங்கி கண்காணிப்பு பாடநெறி, படையலகின் ஆதரவு ஆயுத அதிகாரிகளின் பாடநெறி, அதிகாரிகளின் இடைநிலை தொழிலாண்மை படையலகு நிர்வாக பாடநெறி, அதிகாரிகளின் ஆயுதப் பாடநெறி- பங்களாதேஷ், இளம் அதிகாரிகளின் காலாட்படை பாடநெறி- பங்களாதேஷ், கனிஷ்ட கட்டளை பாடநெறி- இந்திய மற்றும் சிரேஷ்ட கட்டளை பாடநெறி இந்திய போன்ற உள்நாட்டு வெளிநாட்டுப் பாடநெறிகளைப் பின்பற்றியுள்ளார்.