Header

Sri Lanka Army

Defender of the Nation

10th October 2023 00:17:18 Hours

"முன்மாதிரியான தரநிலைகளை நிர்ணயிப்போம் வீண் விரயத்தை குறைப்போம்" - இராணுவ தின செய்தியில் தளபதி

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ என்டியு 74 வது ஆண்டு நிறைவு விழா இராணுவ தினச் செய்தியில் (ஒக்டோபர் 10) வள முகாமையில் இராணுவம் நாட்டிற்கு முன்மாதிரியான தரநிலைகளை நிர்ணவகித்து வீண் விரயத்தை குறைப்போம் என்று கூறுகிறார்.

தளபதியின் இராணுவ தின முழு செய்தி பின்வருமாறு:

இலங்கை இராணுவத்தின் 74 வது ஆண்டு நிறைவிற்காக இராணுவ தளபதியினால் வெளியிடப்படும் செய்தி

அரசின் அபிமானமிக்க பாதுகாவலராக தாய் நாட்டின் இறையாண்மை பிராந்திய ஒருமைப்பாடு என்பவற்றிக்காக என்றும் இணையற்ற சேவையை ஆற்றும் இலங்கை இராணுவத்தின் 74 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 24 வது இராணுவ தளபதியாக எனது இதயபூர்வமான வாழ்த்துக்களை இவ்வாறு தெரிவிக்க கிடைத்தமையை பெறும் பாக்கியமாக கருதுகிறேன். 1949 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி இலங்கை இராணுவம் ஸ்தாபிக்கப்பட்ட தினத்திலிருந்து நாம் பயணித்த நீண்ட பயணத்தில் வெற்றி, கீர்த்தி மற்றும் அபிமானம் என்பன இலகுவாக கிடைக்கப்பெற்றதல்ல அதற்காக இலங்கை இராணுவத்தில் தலைமத்துவம் வழங்கிய இராணுவ தளபதிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் என அனைவரும் அதி உன்னத சேவைகளை வழங்கியுள்ளதோடு, அந்த அனைத்து இராணுவ உறுப்பினர்களையும் பக்தி கலந்த அன்புடன் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தினத்தில் நினைவூட்டுகிறேன். அத்தோடு கடந்த 74 வருட காலத்தில் தேசத்திற்காய் உயிர் நீத்த வீரமிகு படையினரையும் போர்க்களத்தில் காயமுற்ற படையினரையும் கௌரவத்துடன் நினைவூட்டுகின்றேன்.

இலங்கை இராணுவத்தின் வளர்ச்சி மற்றும் எதிர்கால முன்னேற்றத்திற்கு சரியான நோக்கம் மற்றும் தொலை நோக்கு தலைமைத்துவத்தை தரும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தற்போதைய ஜனாதிபதியும், முப்படைகளின் சேனாதிபதியுமான கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களையும் இந்த ஆண்டு நிறைவின் போது கௌரவத்துடன் நினைவு கூறுகிறேன். அத்தோடு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கெளரவ பிரமித பண்டார தென்னகோன் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன அவர்களையும் கௌரவத்துடன் இன்றைய தினத்தில் நினைவூட்டுகிறேன்.

தாய் நாட்டிற்கு எதிராய் வரும் எந்த சவால்களுக்கும் முகம் கொடுத்து அதனை வெற்றி கொள்ளும் சிந்தனையுடனும் எவ்வேளையிலும் ஆயத்தமாய் முன்னிற்கும் இலங்கை இராணுவம் மூன்று தசாப்த காலத்திற்கு மேற்பட்ட இந்நாட்டு பயங்கரவாதத்தை தோற்கடித்து 2009 ம் ஆண்டு முழு இலங்கை மக்களுக்கும் சுதந்திரத்தை கொண்டு வந்தமையை இந்த விசேட தினத்தில் நினைவூட்டுவது கட்டாயமாகும். அதே போன்று முதலில் துலங்கும் நாம் கொவிட் போன்ற தொற்று நோய் காலங்களில் வினைத்திறனுடன் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து தேசத்திற்கான உன்னத பணியை மேற் கொண்டதில் நாட்டு மக்களின் இதயங்களில் நீங்கா இடம்பிடித்துள்ளோம் என நம்புகிறேன். அதே போன்று எதிர்காலத்திலும் தேசத்தின் பாதுகாப்பிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் காரணிகள் மற்றும் பல்வேறுபட்ட நாசகார சந்தர்பங்களில் எதிர் நோக்கும் சவால்களை வெற்றி கொள்ள அவசியமான பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக பேணுவதற்கு இராணுவ உறுப்பினர்கள் என்ற வகையில் எம் அனைவரினதும் கடமையாகும். விஷேடமாக கடந்த வருடம் நாட்டில் ஏற்பட்ட பிரச்சினையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு இராணுவ உறுப்பினர்கள் வழங்கிய ஒத்துழைப்பு காரணமாக தாய் நாட்டில் தற்போதைய அமைதி மற்றும் சுதந்திர சூழல் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை நாட்டு மக்கள் நிச்சியமாக ஏற்றுக்கொள்ளும் காரணி என்பதை இங்கு எடுத்துக்காட்டுகின்றேன்.

இலங்கை இராணுவத்தின் அபிமானமிக்க உறுப்பினர்களாகிய எமது முதன்மை கடமையாவது நாட்டில் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிக்கு எதிராய் வரும் சவால்களை கட்டுப்படுத்துவதாகும். இந் நாட்டின் அதிஉயர் அரசியல் அமைப்பு சட்டங்களை பாதுகாத்து ஜனநாயகத்தை பேணுவதன் ஊடாக தேசிய பாதுகாப்பை உறுதிசெய்வதோடு நாட்டு பொருளாதாரம், சமூக கலாசாரம் தொடர்பிலான அபிவிருத்தி, அமைதி, நல்லிணக்கம் என்பவற்றிக்கு நேரடியான ஒத்துழைப்பை வழங்குவதும் எமது மற்றுமொரு முதன்மை பணியாகும். மேலும் ஐக்கியநாடுகளின் அமைதிகாக்கும் பணிகளில் ஈடுபடுவதன் மூலம் பூகோள அமைதியை நிலைநாட்டுவதற்கு இலங்கை இராணுவத்தின் அர்பணிப்பு சர்வதேச நாடுகளின் பாராட்டுக்களை பெற்றுள்ளமையை இச்சந்தர்ப்பத்தில் பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இராணுவத்தின் பெருமையினை தொடர்ந்தும் பேணும் பொருட்டு தேவையான திட்டம் மற்றும் கொள்கைகள் தொடர்பில் எமது கவனம் இருக்க வேண்டும் என்பதோடு தொழில் நிபுணத்துவம் மிக்க படையினரின் பங்களிப்பு மிகவும் முக்கியமாகும். அதற்காக தனிப்பட்ட பயிற்சி மற்றும் குழுப்பயிற்சி தொடர்பில் கூடுதல் அவதானம் செலுத்தி அதற்கு இராணுவத்தின் பலம், திறன் மற்றும் தொழில் நிபுணத்துவத்தில் உயர்தரத்தை கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதோடு தேவையான சந்தர்பங்களில் பயிற்சி விதானங்களில் மாற்றங்களை கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அறியத்தருகின்றேன்.

இராணுவ உறுப்பினர்கள் நலன்புரிக்காய் செயற்படுத்தப்படும் திட்டங்களை தொடர்ந்து அப்படியே கொண்டு செல்வதோடு மேலும் உங்களுக்கான நலன்புரி சேவைகள் மற்றும் வசதிகளை மேம்படுத்துதற்கான நடவடிக்கைகள் எடுப்பதற்கான அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என்பதை கூறிக் கொள்ள விரும்புகின்றேன். விஷேடமாக தாய் நாட்டிற்காய் உயர் தியாகம் செய்த மற்றும் நிரந்த ஊனமுற்ற படையினருக்கும், ஓய்வுபெற்றவர்களுக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்குமான நலன்புரி செயற்பாடுகள் மற்றும் திட்டங்களை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தபடும் என தெரிவித்துக்கொள்கிறேன்.

இலங்கை விளையாட்டு வரலாற்றில் சர்வதேச வெற்றிகளுக்கு இலங்கை இராணுவம் சிறப்பு பங்களிப்பை வழங்கியுள்ளமை யாவரும் அறிந்த ரகசியமாகும். கடந்த 74 வருட வரலாற்றில் தேசிய மற்றும் சர்வதேச மட்ட விளையாட்டு வெற்றிகள் பல இராணுவ விளையாட்டு வீரர்களால் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன என்பதை நினைவூட்ட வேண்டும். அது போன்ற சர்வதேச வெற்றிகள் மேலும் பலவற்றை பெற்றுக்கொள்ள எமது விளையாட்டு வீரர்களுக்கு திறன் கிட்டும் என நம்புகிறேன். அந்த வகையில் இராணுவ விளையாட்டு வசதிகள் மேலும் விரிவு படுத்தப்பட்டு தேசிய மற்றும் சர்வதேச மட்ட வெற்றிகள் மீதான சந்தர்ப்பங்களை பெற்றுக் கொள்வதற்கு வீர, வீராங்கனைகளுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு எதிர்பார்க்கின்றேன். 74 வருடங்களை நிறைவு செய்யும் இலங்கை இராணுவம் தற்போது பெற்றுள்ள வெற்றி மற்றும் கீர்த்தியை எதிர் காலத்திலும் அதே போன்று பேணி கௌரவமிக்க கடமையை மேற்கொள்வது எமது நோக்கமாக வேண்டும். அதற்காக இராணுவத்தின் அனைத்து மட்டங்களிலும் உள்ள சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட அதிகாரிகள், அனைத்து சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்களின் உயரிய அர்ப்பணிப்பு மற்றும் ஒத்துழைப்பு கிடைக்கும் என நான் நம்புகிறேன். இன்றைக்கான பணியை நாளைக்கு கடத்தாமல் வினைத்திறனுடன் செயற்பட வேண்டும் என்பதோடு எதிர்காலம் தொடர்பிலான திட்டத்துடன் செயற்படுவதனூடாக இந்த நோக்கத்தை அடைய முடியும். அதற்காக உங்கள் அனைவரையும் இணைந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

வீரமிகு படையினரே, அன்பான தாய் நாட்டின் அனைத்து மக்களும் என்றும் நம்பிக்கை வைப்பது "ராஜ்ய பாதுகாவலர்" ஆகிய இலங்கை இராணுவம் மீது என்பதை இங்கு குறிப்பிடுவதோடு அந்த நம்பிக்கையை என்றும் பாதுகாப்பது எமது கடமையாகும். ஆகவே தனிப்பட்ட கௌரவம் மற்றும் இராணுவத்தின் விம்பத்தை மேம்படுத்தும் வகையில் தங்களுக்கு வழங்கப்படும் பொறுப்புக்கள் மற்றும் கடமைகளை முறையாக நிறைவேற்றல் வேண்டும். தற்போது இராணுவத்திற்கு அர்பணித்து இராணுவத்தின் அபிவிருத்தி மற்றும் நாட்டின் அபிவிருத்திக்காக பெறுமதிமிக்க சேவையை மேற்கொள்ளும் அனைத்து அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள், சிவில் ஊழியர்கள் அவர்களின் குடும்பங்களின் அன்பான பிள்ளைகள் உட்பட அனைத்து உறுப்பினர்கள் அனைவருக்கும் 74 வது ஆண்டு நிறைவிற்கான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதோடு அனைவருக்கும் வெற்றிகரமான எதிர்காலம் அமைய பிரார்த்திக்கின்றேன்.

உங்கள் அனைவருக்கும் கடவுள் துணை!!

எம்எல்வீஎம் லியனகே ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ என்டியு

லெப்டினன் ஜெனரல்

இராணுவ தளபதி

2023 ஒக்டோபர் மாதம் 10ம் திகதி