Header

Sri Lanka Army

Defender of the Nation

07th October 2023 22:33:25 Hours

இராணுவத் தளபதி மாத்தறை வெள்ள நிவாரணப் பணியை மேற்பார்வையிட்டார்

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்பீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் மாத்தறை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் படையினரால் மேற்கொள்ளப்படும் மனிதாபிமான வெள்ள நிவாரணப் பணிகளை சனிக்கிழமை (7) பிற்பகல் நேரில் சென்று பார்வையிட்டார்.

61 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்ஏஜேஎன் ரணசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசி அவர்கள் மாத்தறை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மாலிம்பட மற்றும் அத்துடாவ பிரதேசங்களில் ஏற்பட்ட வெள்ளம் தொடர்பான மோசமான நிலை, தற்போதைய அபிவிருத்திகள் தொடர்பாக மாத்தறை 3 வது கெமுனு ஹேவா படையினருக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார்.

இராணுவத் தளபதி மற்றும் பல சிரேஷ்ட அதிகாரிகள் மாத்தறை மாவட்ட செயலாளரை சந்தித்ததுடன் அவர், இராணுவத் தளபதிக்கு தற்போதைய நிலைமையை விளக்கினார். அப்பகுதிகளில் இயல்பு நிலை திரும்பும் வரை இராணுவத்தின் மனிதாபிமான உதவிகளை தொடருமாறு கேட்டுக்கொண்டார்.

இராணுவத் தளபதி மாலிம்படை பிரதேச செயலக வளாகத்திற்கு வருகை தந்ததுடன், இராணுவத்தினரால் உணவு தயாரிப்பதற்காக தற்காலிக சமையல் கூடத்தை பராமரிக்கும் பிரதேச செயலாளரை சந்தித்தார். இராணுவத் தளபதி அங்கு பணிபுரியும் சிப்பாகளுடன் உரையாடியதுடன், அதில் இருந்து தினமும் 3000 க்கும் மேற்பட்ட மக்களுக்கு உணவு வழங்கப்படுகிறது.

இராணுவத் தளபதி மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள், மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மாலிம்பட பகுதியை பார்வையிட்டதுடன், படையினர் எவ்வாறு வெள்ள நிவாரண அவசர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என்பதை நேரில் பார்வையிட்டனர். தற்காலிக முகாம்களுக்குச் சென்று பாதிக்கப்பட்ட பொதுமக்களிடமும் கலந்துரையாடினார்.

மேற்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூஎச்கேஎஸ் பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ, 61 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்ஏஜேஎன் ரணசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ, 613 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் கேஏடிஎன்ஆர் கன்னங்கர ஆர்எஸ்பீ ஐஜி மற்றும் பல சிரேஷ்ட அதிகாரிகள் இராணுவத் தளபதியின் விஜயத்தின் போது கலந்து கொண்டனர்.

மாலிம்பட பிரதேசத்திற்கு விஜயம் செய்த இராணுவத் தளபதி அத்துடாவ அணையின் நீர் மட்டம் உயர்வதால் அணை பிளவுபடுவதைத் தடுக்கும் வகையில் நேற்று (6) மாலை முழுவதும் இராணுவத்தினரால் மணல் மூட்டைகளை வைத்து பலப்படுத்தப்பட்டிருந்ததை பார்வையிட்டார். பின்னர், இராணுவத்தின் வெள்ள நிவாரணப் பணிகள் குறித்த அறிவிப்புகளைப் பெறுவதற்காக தளபதி துடாவ பகுதிக்கும் விஜயம் செய்தார்.