Header

Sri Lanka Army

Defender of the Nation

06th October 2023 23:06:59 Hours

ஓய்வுபெறும் மேஜர் ஜெனரல் டபிள்யூ.பி.எஸ்.எம் அபேசேகர அவர்களின் சேவைக்கு பாராட்டு

இராணுவத் தளபதி, லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் இன்று (ஒக்டோபர் 06) ஓய்வுபெறும் நிதி முகாமைத்துவ பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமும் இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணியின் படைத் தளபதியுமன மேஜர் ஜெனரல் டபிள்யூ.பி.எஸ்.எம் அபேசேகர ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ அவர்களை அவரது குடும்ப உறுப்பினர்களுடன் அழைத்து பாராட்டினார்.

ஓய்வுபெறும் இலங்கை பீரங்கி படையணியின் சிரேஷ்ட அதிகாரியின் போர்க்களத்திலும் போருக்குப் பின்னரான சூழ்நிலையிலும் அவரின் அர்ப்பணிப்பு மற்றும் முன்மாதிரியான சேவை குறித்து இராணுவத் தளபதி உயர்வாகப் பேசியதுடன், அவரது எதிர்காலத் திட்டங்களை கேட்டறிந்த இராணுவத் தளபதி, அவரது எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

ஓய்வு பெறும் சிரேஷ்ட அதிகாரியுடன் சில நினைவுகளை பகிர்ந்து கொண்ட அவர், அலுவலகத்தில் இருந்த அவரது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் உரையாடியதுடன், ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் பொறுப்பான பதவியை ஆற்றுவதற்கு அவர்கள் வழங்கிய ஆதரவையும் பாராட்டினார்.

இச்சந்திப்பின் போது இலங்கை பீரங்கி படையணியில் லெப்டினன்டாக இருக்கும், மேஜர் ஜெனரல் டபிள்யூ.பி.எஸ்.எம் அபேசேகர ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ அவர்களின் மகனுடன் கலந்துரையாடியதில் இராணுவத் தளபதியும் மகிழ்ச்சியடைந்தார். அவரது தொழில் வாய்ப்புகளுக்காக அவரை ஊக்குவித்து, வளரும் அதிகாரிக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார், மேலும் அவர் எதிர்காலத்தில் இராணுவத்தின் புகழ்பெற்ற இராணுவத் தலைவராக வேண்டும் என்றும் பாராட்டு தெரிவித்தார்.

மேஜர் ஜெனரல் டபிள்யூ.பி.எஸ்.எம் அபேசேகர ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ அவர்களும் இராணுவத் தளபதியின் வாழ்த்துக்களுக்கும் வழிகாட்டுதலுக்கும் நன்றி தெரிவித்தார்.

சந்திப்பின் முடிவில், லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் ஓய்வு பெறும் சிரேஷ்ட அதிகாரிக்கு பாராட்டுக்கான சிறப்பு நினைவுச் சின்னத்தையும், அவரது குடும்பத்திற்கு சிறப்பு பரிசையும் வழங்கினார்.

ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சுருக்கமான வரலாறு பின்வருமாறு :-

மேஜர் ஜெனரல் டபிள்யூ.பி.எஸ்.எம் அபேசேகர ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ அவர்கள் 1988 பெப்ரவரி 22 ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் பயிலிளவல் அதிகாரியாக இணைந்துக்கொண்டார். தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பின்னர், அவர் இரண்டாம் லெப்டினன் நிலையில் 1989 டிசம்பர் 16 அன்று இலங்கை பீரங்கி படையணியில் நியமிக்கப்பட்டார். இராணுவத்தில் அவர் பணியாற்றிய காலப்பகுதியில் தொடர்ச்சியாக அடுத்தடுத்த பதவிகளுக்கு உயர்த்தப்பட்ட பின்னர், அவர் 28 ஜனவரி 2021 அன்று மேஜர் ஜெனரல் நிலைக்கு உயர்த்தப்பட்டார்.

மேஜர் ஜெனரல் டபிள்யூ.பி.எஸ்.எம் அபேசேகர ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ அவர்கள் அர்ப்பணிப்புள்ள பீரங்கி படையணியின் வீரராக எதிரிகளை எதிர்கொள்ளும் அவரது சிறந்த துணிச்சலுக்கான பணிக்கு ரண சூர (ஆர்எஸ்பீ) பதக்கத்தினால் அலங்கரிக்கப்பட்டுள்ளார்.

அவர் ஓய்வுபெறும் போது, நிதி முகாமைத்துவ பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமும் இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணியின் படைத் தளபதியாகவும் பதவி வகித்துள்ளார். மேலும் அவர் பனாகொடை ஆட்சேர்ப்பு பயிற்சி நிலையத்தின் அதிகாரி பயிற்றுவிப்பாளர், 4 வது இராணுவ பீரங்கி படையணியின் குழு தளபதி, 4 வது இராணுவ பீரங்கி படையணியின் புலனாய்வு அதிகாரி, 4 வது இராணுவ பீரங்கி படையணியின் பெட்டரி கெப்டன், 4 வது இராணுவ பீரங்கி படையணியின் பெட்டரி கட்டளை அதிகாரி, 4 வது இராணுவ பீரங்கி படையணியின் புலனாய்வு அதிகாரி, -டி-முகாம் அனைத்து செயல்பாட்டு அதிகாரிக்கு உதவியாளர், இராணுவ தலைமையகத்தில் பிரதி பதவி நிலைப்பிரதானியின் உதவியாளர்-டி- முகாம், இராணுவ தலைமையக இராணுவ செயலாளர் பிரிவின் பணிநிலை அதிகாரி 2 , இராணுவ தலைமையக இராணுவ செயலாளர் பிரிவின் பணிநிலை அதிகாரி 1, இராணுவ பீரங்கி படையணி தலைமையகத்தின் பணிநிலை அதிகாரி 1 (நிர்வாகம்), இராணுவ பீரங்கி படையணி தலைமையகத்தின் உத்தியோகபூர்வ பணிநிலை அதிகாரி, இராணுவ பீரங்கி படையணி தலைமையகத்தின் பிரதி நிலைய தளபதி, இராணுவ தலைமையக விளையாட்டுப் பணிப்பக கேணல், ரணவிரு ஆய்வு நிலையத்தின் பிரதித் தளபதி, ரணவிரு ஆய்வு நிலையத்தின் தளபதி, புனர்வாழ்வு பணிப்பகத்தின் பணிப்பளர், புனர்வாழ்வு பணிப்பகத்தின் பணிப்பளர் நாயகம் மற்றும் இலங்கை இராணுவ கிரிக்கெட் குழுவின் தலைவர், ஆகிய நியமனங்களை வகித்துள்ளார்.

அவர் தனது இராணுவ வாழ்க்கையில் பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாடநெறிகளை கற்றுள்ளார். பீரங்கி இளம் அதிகாரி பாடநெறி, அதிகாரிகளின் படையணி சமிக்ஞ்சை பாடநெறி, அதிகாரிகளின் சிறப்புப் பாடநெறி, புலனாய்வு பாடநெறி, இந்தியாவில் பீரங்கி இளம் அதிகாரி பாடநெறி, பாகிஸ்தானில் அதிகாரிகளின் பீரங்கி இருப்பிட பாடநெறி, அமெரிக்காவில் ஏஎன்பீடிகியூ-36 ஆயுத்ததை கண்டுபிடிக்கும் ரேடார் பாடநெறி மற்றும் இந்தியாவில் பீரங்கி அடிப்படை பாடநெறி

மேலும், சிரேஷ்ட அதிகாரி ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாக முதுகலைப் பட்டம், சர்வதேச கற்கைகளுக்கான பண்டாரநாயக்க நிலையத்தில் போர் தீர்வு திறன் அபிவிருத்தி டிப்ளோமா, சர்வதேச கற்கைகளுக்கான பண்டாரநாயக்க நிலையத்தில் நிபுணத்துவ இராஜதந்திர டிப்ளோமா மற்றும் தேசிய ஒலிம்பிக் விளையாட்டு நிர்வாகிகள் பாடநெறி ஆகியவற்றைப் கற்றுள்ளார்.