Header

Sri Lanka Army

Defender of the Nation

05th October 2023 21:00:04 Hours

ஓய்வுபெறும் மேஜர் ஜெனரல் டிஎம்கேடிபி புஸ்ஸல்ல அவர்களின் சேவைக்கு பாராட்டு

இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதியும் விஜயபாகு காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டிஎம்கேடிபி புஸ்ஸல்ல ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் 36 வருட காலச் சிறப்புமிக்க பணியின் பின்னர் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறவுள்ள நிலையில் இன்று (ஒக்டோபர் 5) பிற்பகல் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை அவரது குடும்ப உறுப்பினர்களுடன் சந்தித்தார்.

விஜயபாகு காலாட் படையணியில் ஓய்வுபெறும் காலாட் படை வீரரின் அர்ப்பணிப்பு மற்றும் பணி தொடர்பாக இராணுவத் தளபதி சுமூகமான உரையாடல்களின் போது உயர்வாகப் பேசியதுடன், எல்ரீரீஈ உடனான இறுதி யுத்தத்தில் நாட்டை விடுவிக்க மனிதாபிமான நடவடிக்கைகளின் செயல்பாட்டு அம்சங்கள் தொடர்பாக சில நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார்.

அதேபோன்று, இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதியாகவும், விஜயபாகு காலாட் படையணியின் படைத் தளபதியாக கடமையாற்றியதையும் அவர் ஆற்றிய பங்கை பாராட்டினார். அவரது எதிர்காலத் திட்டங்கள், வாய்ப்புகள் குறித்தும் கேட்டறிந்த இராணுவத் தளபதி, அவரது எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இராணுவத் தளபதி ஓய்வுபெறும் அதிகாரியின் பொறுப்பான பதவியை ஆற்றுவதற்கு அவரது குடும்ப உறுப்பினர்கள் வழங்கிய ஆதரவைப் பாராட்டியதுடன், அலுவலகத்தில் இருந்த அவரது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் சில கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார்.

விஜயபாகு காலாட் படையணியில் இரண்டாவது லெப்டினன்டாக இருக்கும் புகழ்பெற்ற காலாட்படை வீரரான மேஜர் ஜெனரல் டிஎம்கேடிபி புஸ்ஸல்ல ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களின் மூத்த மகனுடன் கலந்துரையாடியதில் இராணுவத் தளபதியும் மகிழ்ச்சியடைந்தார். அவரது தொழில் வாய்ப்புகளுக்காக அவரை ஊக்குவித்து, வளரும் அதிகாரிக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார், மேலும் அவர் எதிர்காலத்தில் இராணுவத்தின் புகழ்பெற்ற இராணுவத் தலைவராக வேண்டும் என்றும் பாராட்டு தெரிவித்தார்.

மேஜர் ஜெனரல் டிஎம்கேடிபி புஸ்ஸல்ல ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலுக்கு நன்றி தெரிவித்தார். உரையாடல்களின் முடிவில், லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் குடும்பத்திற்கு ஒரு சிறப்பு பரிசு வழங்கியதுடன், ஓய்வு பெறுபவருக்கு பாராட்டுக்கான அடையாளமாக சிறப்பு நினைவுச் சின்னத்தை வழங்கினார்.

ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சுருக்கமான வரலாறு பின்வருமாறு :-

மேஜர் ஜெனரல் டிஎம்கேடிபி புஸ்ஸல்ல ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் 1987 ஆம் ஆண்டு ஜூலை 21 ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் பயிலிளவல் அதிகாரியாக இணைந்துக்கொண்டார். தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பின்னர், அவர் இரண்டாம் லெப்டினன் நிலையில் 23 ஜூன் 1989 அன்று விஜயபாகு காலாட் படையணியில் நியமிக்கப்பட்டார். இராணுவத்தில் அவர் பணியாற்றிய காலப்பகுதியில் தொடர்ச்சியாக அடுத்தடுத்த பதவிகளுக்கு உயர்த்தப்பட்ட பின்னர், அவர் 08 ஜனவரி 2021 அன்று மேஜர் ஜெனரல் நிலைக்கு உயர்த்தப்பட்டார்.

மேஜர் ஜெனரல் டி.எம்.கே.டி.பி புஸ்ஸல்ல ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் அர்ப்பணிப்புள்ள காலாட் படையணியின் வீரராக எதிரிகளை எதிர்கொள்ளும் அவரது சிறந்த துணிச்சலுக்கான பணிக்கு ரண விக்கிரம பதக்கம் (ஆர்டபிள்யூபீ) மற்றும் ரண சூரபதக்கம் (ஆர்எஸ்பீ) ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டுள்ளார்.

அவர் ஓய்வுபெறும் போது இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதியாகவும் பதவி வகிக்கின்றார். விஜயபாகு காலாட் படையணியின் குழு தளபதியாவும், 6 வது விஜயபாகு காலாட் படையணியின் புலனாய்வு அதிகாரி, 6 வது விஜயபாகு காலாட் படையணியின் அதிகாரி கட்டளை, 8 வது விஜயபாகு காலாட் படையணியின் அதிகாரி கட்டளை, 53 வது காலாட் படையணியின் பொது பணி அதிகாரி 3 (நடவடிக்கைகள்), 1 வது விஜயபாகு காலாட் படையணியின் செயல்பாடு மற்றும் பயிற்சி அதிகாரியாகவும், 9 வது விஜயபாகு காலாட் படையணியின் செயல்பாடு மற்றும் பயிற்சி அதிகாரியாகவும், அதிகாரவாணையற்ற அதிகாரி பயிற்சி பாடசலையின் அதிகாரி பயிற்றுவிப்பாளர், அதிகாரவாணையற்ற அதிகாரி பயிற்சி பாடசலையின் பிரதம பயிற்றுவிப்பாளர், 8 வது மற்றும் 4 வது விஜயபாகு காலாட் படையணியின் 2 ம் கட்டளை அதிகாரியாகவும், 7 வது விஜயபாகு காலாட் படையணியின் கட்டளை அதிகாரியாகவும், விஜயபாகு காலாட் படையணி தலைமையகத்தின் பணி நிலை அதிகாரி 1(நிர்வாகம் ), வெலிஓயா தலைமையகத்தின் பொது பணி அதிகாரி 1 (செயல்பாடுகள்), 56 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, விஜயபாகு காலாட் படையணியின் நிலைய தளபதி, 222 வது காலாட் பிரிகேட்டின் பிரிகேட் தளபதி, கூட்டுச் சேவைகள் மொழிப் பயிற்சி நிறுவனத்தின் தளபதி, இராணுவப் பயிற்சிப் பாடசலையின் தளபதி, 62 மற்றும் 51 வது காலாட் படைப்பிரிவுகளின் தளபதி, இராணுவத் தலைமையகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் நாயகம், மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி, இயந்திரவியல் காலாட் படையணியின் படைத் தளபதி மற்றும் இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் படைத் தளபதியாகவும் அவர் நியமனங்களை வகித்துள்ளார்.

அதிகாரிகளின் மிட்-கேரியர் யூனிட் அட்மினிஸ்ட்ரேஷன் பாடநெறி, அடிப்படை பாராசூட் பாடநெறி, பாகிஸ்தான் இளம் அதிகாரி காலாட் பாடநெறி, இந்தியா கனிஷ்ட கட்டளை பாடநெறி, இராணுவ படையலகு தளபதிகள் பாடநெறி, சீனா, பங்களதேஷ் ஐக்கிய நாடுகளின் படைத் தளபதிகள் போன்ற பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாடநெறிகளை அவர் தனது இராணுவ வாழ்க்கையில் கற்றுள்ளார்.