06th October 2023 16:31:02 Hours
எதிர்வரும் 74 வது இராணுவ தினமான (ஒக்டோபர் 10) நிகழ்வை முன்னிட்டு இறுதி சமயப் நிகழ்வாக இரவு முழுவதுமான பிரித் பாராயணம் வியாழக்கிழமை (ஒக்டோபர் 5) மாலை ஸ்ரீ ஜயவர்தனபுர இராணுவத் தலைமையக வளாகத்தில் ஆரம்பமானது.
இது நாட்டின் மிகவும் விரும்பப்படும் சேவை வழங்குநரின் முன்னோக்கி அணிவகுப்பில் ஆன்மீக ஆசீர்வாதங்கள் வழங்கப்பட்டதுடன், வியாழக்கிழமை பல மத ஏற்பாடுகள், பல முன்னணி பௌத்த தேரர்களான கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமகிரி தர்ம மகா சங்க சபையின் மகா நாயக்க தேரர், தம்ம விஜயலோக விகாரையின் பிரதம பிக்கு வண. கலாநிதி இத்தபான தம்மாலங்கார நாயக்க தேரர், ருக்மலே மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வேந்தர், கோட்டே இஞ்சூவில் வண. கலாநிதி அலுத்நுவர அநுருத்த தேரர் உட்பட. மகா விகாரையின், வண. உடுவே தம்மாலோக தேரர் மற்றும் ஆலன் மெத்தினியாராமய மற்றும் பல பிக்குகள் ஆகியோர் பிரித் பாரயணம் நிகழ்வில் கலநதுக் கொண்டனர்.
இராணுவ பௌத்த சங்கத்தின் அழைப்பின் பேரில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ, ஆர்எஸ்பீ,என்டியூ, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே மற்றும் பிரதிநிதிகள் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் உட்பட பலர் இந்த ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டனர்.
பௌத்த தேரர்கள் வண்ணமயமான ஊர்வலத்தின் முன்னதாக இராணுவ கலாசார நடனக் குழுக்கள், பாரம்பரிய வாத்தியங்கள் மற்றும் கொடி ஏந்தியவர்களுடன் அழைத்துச் செல்லப்பட்டனர்,
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே புனித நினைவுப் சின்னத்தை ஏந்திச் சென்றதுடன், பாரம்பரியமான 'பிருவான போத' (பழைய வேதங்கள் அடங்கிய புத்தகம்) பழைய சம்பிரதாயத்திற்கு அமைய பிரதி பதவி நிலை பிரதனி மேஜர் ஜெனரல் சிடி ரணசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் எடுத்துசென்றார்.
தேரர்கள் வருகை தந்ததை தொடர்ந்து லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் மகா சங்க உறுப்பினர்களுக்கு அடையாளமாக சம்பிரதாயத்திற்கு அமைய தாம்புலம் வழங்கினார். 74 ஆண்டு நிறைவின் ஆசிர்வாதம் பெறுவதற்காக இரவோடு இரவாக பிரித் பராயணம் இடம்பெற்றதுடன், தர்மராஜ பிரிவேன் விகாரையின் பிரதமகுருவான வண. கொஸ்கொல்லே சீலரதன நாயக்க தேரர், இராணுவத்தின் 74வது ஆண்டு நிறைவு மற்றும் இராணுவத்தின் தேசத்திற்கான அர்ப்பணிப்பு சேவைகளின் முக்கியத்துவம் குறித்து ‘அனுஷாசனம்’ (சொற்பொழிவு) நிகழ்த்தினார். அத்துடன் காயமடைந்த போர்வீரர்களுக்கும், மறைந்தவர்களுக்கு ஆசீர்வாதங்களை வழங்கினார், அமைப்பின் புகழ்பெற்ற கடந்த கால வரலாற்றை நினைவு கூர்ந்த அவர் இராணுவத்தின் மாறுபட்ட பணிகளை பாராட்டினார் மற்றும் தேசத்தின் பாதுகாவலர்களாக அதன் முன்னோக்கி நகர்வுக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
இலங்கை இராணுவ பௌத்த சங்கம், மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் யுடி விஜேசேகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சிடி பீஎஸ்சீ தலைமையிலான இலங்கை இராணுவ பௌத்த சங்கத்தின் அலுவலகப் பொறுப்பாளர்கள் ஆகியோருடன் இணைந்து அனைத்து அதிகாரிகள் மற்றும் படையினரின் ஆதரவுடன் தானம் ஏற்பாடு செய்யப்பட்டது.
மறுநாள் தேரர்களுக்கு தானம் வழங்கியதுடன் மத நிகழ்வுகள் நிறைவடைந்தன. அதற்கமைய லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் வெள்ளிக்கிழமை (ஒக்டோபர் 6) மகா சங்கத்தினருக்கு 'தான' வழங்கும் நிகழ்வில் தனது மனைவி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுடன் கலந்துகொண்டார்.