Header

Sri Lanka Army

Defender of the Nation

05th October 2023 20:57:04 Hours

பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மண்டபத்தில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைகழக பட்டமளிப்பு விழாவிற்கு தளபதிக்கு அழைப்பு

ஜெனரல் சார் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவம், பொறியியல், தொழில்நுட்ப அறிவியல், வணிகம் மற்றும் கலை உள்ளிட்ட பல்வேறு கல்விப் பிரிவுகளில் தங்கள் பாடநெறியை வெற்றிகரமாக நிறைவுசெய்த இளங்கலைப் பட்டதாரிகளுக்கான பட்டமளிப்பு விழா ஒக்டோபர் 3 மற்றும் 4 ம் திகதி பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

கலாநிதி, முதுகலை மற்றும் இளங்கலை பட்டப்படிப்புகளை நிறைவு செய்தவர்கள் இவ்விழாவின் போது தங்களின் பட்டங்கள் மற்றும் சான்றிதழ்களைப் பெற்றனர்.

பட்டமளிப்பு விழாவின் நிறைவு ஒக்டோபர் 4 ஆம் திகதி நடைபெற்றது, இந் நிகழ்வில் அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

கௌரவ. பட்டமளிப்பு விழாவின் போது கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்கள் கடிதங்களை வழங்கி வைத்தார். அவரது உரையில், 2023 ஆம் ஆண்டுக்கான அனைத்து புதிய பட்டதாரிகளுக்கும் ஜனாதிபதி விக்கிரமசிங்க அவர்கள் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், அவர்களின் கல்வித் துறையில் அவர்களின் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் பாராட்டினார்.

ஜனாதிபதியின் பதவி நிலை பிரதானியும் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகருமான திரு. சாகல ரத்நாயக்க, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரேமித பண்டார தென்னகோன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ எம்பீல், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைகழக வேந்தர் ஜெனரல் எஸ்எச்எஸ் கோட்டேகொட (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ , பாதுகாப்பு பதவி நிலை பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ எம்பில், இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, கடற்படை மற்றும் விமானப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர், பல்கலைக்கழகத் தலைவர்கள், அரச அதிகாரிகள், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைகழக கல்விப் பணியாளர்கள், முப்படை அதிகாரிகள், பட்டதாரிகளின் பெற்றோர்கள் மற்றும் பல அழைப்பாளர்கள் அன்றைய நிகழ்ச்சிகளைக் கண்டுகளித்தனர்.