Header

Sri Lanka Army

Defender of the Nation

05th October 2023 20:37:23 Hours

எதிர்வரும் 74 வது இராணுவ ஆண்டு தினத்தை முன்னிட்டு இந்து ஆசீர்வாத பூஜை

இலங்கை இராணுவத்தின் ஆண்டு விழா மற்றும் இராணுவ தினத்தை (ஒக்டோபர் 10) முன்னிட்டு கொழும்பு 5, மயூரபதி ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவிலில் புதன்கிழமை (5) காலை விஷேட ஆசீர்வாத பூஜை நடைபெற்றது.

இலங்கை இராணுவ இந்து சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆசீர்வாத பூஜையின் போது இராணுவக் கொடி கருவறைக்குள் கொண்டு செல்லப்பட்டு ஆசீர்வாதம் வழங்கப்பட்டது.

இராணுவ இந்து சங்கத்தின் தலைவர் பிரிகேடியர் கேஎம்பீஎஸ்பி குலதுங்க ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் பிரதம அதிதியான இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை பல சிரேஷ்ட அதிகாரிகளுடன் வரவேற்றதுடன், ஆலய மணிகள் ஒலிக்கத் தொடங்கியதும் இராணுவக் கொடியை ஆலய பிரதம குருக்களிடம் ஆசீர்வாதத்திற்காக கையளிக்கப்பட்டது.

ஆலய பிரதம சிவாச்சாரியார் சிவஸ்ரீ ரிஷி குருக்கள் தலைமையில் இடம்பெற்ற பூஜை எதிர்வரும் 74 வது இராணுவ ஆண்டு நினைவு தினத்திற்கு ஆசிர்வாதத்தையும் முக்கியத்துவத்தையும் வழங்கியது.

இப்பூஜையின் போது பழங்கள், நெய் மற்றும் மாலைகள் போன்றவற்றை தெய்வங்களுக்கு சமர்ப்பிக்கும் பாரம்பரிய ஆசீர்வாத பூஜை இந்து மதத்தின் தெய்வீக சடங்குகளில் ஒன்றாக கருதப்படுகிறது, இதன்போது இராணுவத் தளபதி ஆசீர்வாதங்களைப் பெறுவதற்காக இராணுவக் கொடிகளில் மல்லிகைப் பூக்களை தூவினார்.

லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் மத அனுஷ்டானத்திற்கு பின்னர், கோவிலின் அபிவிருத்திக்காக கோவிலின் தலைவர் திரு.பெரியசாமி சுந்தரலிங்கம் அவர்களிடம் அனைத்து இராணுவத்தினர் சார்பாகவும் நிதியுதவியை வழங்கினார். இந்த பழமையான கோவிலில் தலைமை சிவாச்சாரியார் வண. சிவஸ்ரீ ரிஷி குருக்கள், இராணுவ அமைப்பாளர்களுடன் அன்றைய நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை செய்தார்.

இராணுவ பதவி நிலை பிரதானி, பிரதி பதவி நிலை பிரதானி, சிரேஷ்ட அதிகாரிகள், இராணுவ இந்து சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் இந்து சமயத்தைச் சார்ந்த பல சிப்பாய்கள் ஆசீர்வாத பூஜையில் கலந்து கொண்டனர்.