Header

Sri Lanka Army

Defender of the Nation

28th September 2023 08:30:22 Hours

இராணுவத் தளபதியுடன் 'அபிமன்சல-1' இன் போர்வீரர்களுக்கு மதிய உணவு

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் வரவிருக்கும் இராணுவ ஆண்டு விழாவை முன்னிட்டு ஜெயஸ்ரீ மஹா போதியில் நடைபெற்ற மத நிகழ்வில் 2009 மே மாதத்திற்கு முன்னர் போர்க்களத்தில் வீரம் மற்றும் தியாகங்களுடன் போர் செய்து உயிர்த் தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், நிரந்தரமாக காயமடைந்த போர்வீரர்களின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளித்து, அநுராதபுரத்தில் உள்ள 'அபிமன்சல - 1' நல விடுதிக்கு சென்று அங்கு புனர்வாழ்வு பெற்றுவரும் 40 போர்வீரர்களை சந்தித்தார்.

லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, இராணுவ சேவை வனதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே மற்றும் பல சிரேஷ்ட அதிகாரிகள் நல விடுதிக்கு விஜயம் செய்து, ஒவ்வொரு போர் வீரர்களிடமும் அவர்களின் நலன் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்தனர். தனது தந்தையின் பாசத்தையும் அரவணைப்பையும் வெளிப்படுத்தும் வகையில், இராணுவத் தளபதி அவர்கள் ஒவ்வொருவருக்கும் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பரிசுப் பொதியை வழங்கினார்.

போர்வீரர்கள் மீதான அக்கறை, நல்லெண்ணம் மற்றும் ஒற்றுமையின் மற்றொரு அடையாளமாக அன்றைய பிரதம விருந்தினர், அவர்களுடன் மதிய உணவை உண்டு மகிழ்ந்தார்.

இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டபிள்யூஏஎஸ்எஸ் வனசிங்க ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ, இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் டிஎம்கேடிபி புஸ்ஸல்ல ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ, முதன்மை பணிநிலை அதிகாரிகள், பாதுகாப்புப் படைத்தலைமையக தளபதிகள், புனர்வாழ்வு பணிப்பகத்தின் பணிப்பாளர் 'அபிமன்சல-1' இன் தளபதி மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் அன்றைய நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.

இராணுவத் தளபதியின் 'அபிமன்சல-1' இற்கான விஜயமானது விருந்தினர் பதிவேட்டுப் புத்தகத்தில் கையொப்பமிட்டதுடன் நிறைவுற்றது.