Header

Sri Lanka Army

Defender of the Nation

28th September 2023 21:33:43 Hours

இராணுவத்தின் 74வது ஆண்டு விழாவை முன்னிட்டு ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடு

எதிர்வரும் 74 ஆவது இராணுவ ஆண்டு விழாவை (அக்டோபர் 10) ஆசீர்வதிக்கும் வகையில் பௌத்த நம்பிக்கையின் இரண்டாவது சமய நிகழ்வு இன்று (செப்டம்பர் 28) காலை புனித தந்ததாது வைக்கப்பட்டுள்ள கண்டி புனித ஸ்ரீ தலதா மாளிகையில் ஆரம்பமானது.

கண்டியில் நடைபெற்ற அன்றைய வழிபாடுகளில் பிரதான பங்கேற்பாளராக கலந்து கொண்ட இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டபிள்யூஏஎஸ்எஸ் வனசிங்க ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ, இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் டிஎம்கேடிபி புஸ்ஸல்ல ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தினுள் வரவேற்றனர்.

மரபுகளுக்கு இணங்க, இராணுவக் கொடி, இராணுவத் தொண்டர் படையணி கொடி, அனைத்து பாதுகாப்புப் படைத் தலைமையகம் கொடிகள், அனைத்து முன்னரங்கு பராமரிப்புப் பகுதி கொடிகள், படைப்பிரிவுகளின் கொடிகள், பிரிகேட்களின் கொடிகள், மற்றும் பயிற்சி நிலையங்களின் கொடிகள், 'தேசத்தின் பாதுகாவலர்கள்' என்று அன்புடன் அங்கீகரிக்கப்பட்ட இராணுவ அமைப்பின் கௌரவம், நாடு முழுவதும் உள்ள இராணுவ அமைப்புகளின் வாழ்க்கை நினைவகம் மற்றும் அமைப்பின் கண்ணியத்திற்கு அடையாள மதிப்பு சேர்க்கும் வகையில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பிரதம அதிதியான லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களின் தலைமையில் ஒவ்வொரு அமைப்பினதும் பிரதிநிதி அதிகாரிகள் / அதிகாரவாணையற்ற அதிகாரிகளால் ஸ்ரீ தலதா மாளிகையின் சன்னிதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு ஆசிர்வதிக்கப்பட்டது.

இராணுவத் தளபதி இலங்கை இராணுவக் கொடியை ஊர்வலத்தின் முன்பாக ஏந்திச் சென்றதுடன், கொடிகள் அனைத்தும் சன்னிதி பொருப்பாளர்களுக்கு வழங்கப்பட்டன, ‘செத்பிரித்’ பாராயணங்கள் மற்றும் மத அனுஷ்டானங்கள் நாட்டின் பாதுகாப்புக்கான இராணுவத்தின் நீண்ட பயணத்திற்கு ஆசீர்வாதங்களை வழங்கின.

மத அனுஷ்டானங்களின் பின்னர் சிரேஷ்ட அதிகாரிகள் கொடிகளை மீளப் பெற்றுக் கொண்டு உரியவர்களிடம் கையளித்தனர். இராணுவத்தில் உள்ள அனைவரின் சார்பாகவும் வணக்கத்திற்குரிய இந்த புனித தலத்தின் அபிவிருத்திக்காக தியவதன நிலமே திரு. பிரதீப் நிலங்க தெல பண்டார அவர்களிடம் இராணுவத் தளபதி நிதி நன்கொடையை வழங்கினார்.

இந்த வழிபாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நிறைவேற்று பணிப்பாளர் கிளை, மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகம், பல்லேகல 11 வது காலாட் படைப்பிரிவு தலைமையகம் மற்றும் ஆளனி நிர்வாக பணிப்பகம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்தன.

ஸ்ரீ தலதா மாளிகைக்கு ஊர்வலமாக சென்ற பௌத்த பிக்குகளுக்கு (சங்கீக தானம்) அன்னதானம் வழங்குவதிலும் விகாரைக்கு 'கிலான்பச' மற்றும் 'புத்த பூஜை' வழங்குவதிலும் தளபதி கலந்து கொண்டார்.இந்த அன்னதான நிகழ்வில் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களும் கலந்துகொண்டார்.

அஸ்கிரிய பீடத்தின் வண. ஆனமடுவே தம்மாதஸ்ஸி தேரர் சொற்பொழிவு நிகழ்த்தியதுடன், தேசத்தின் நலன்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட இராணுவத்தின் 74 ஆண்டுகால சேவைகளை பாராட்டினார்.

இராணுவத் தளபதி மற்றும் ஏனைய பிரதிநிதிகள் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் மரியாதைக்குரிய மகா சங்க உறுப்பினர்களுக்கு 'பரிஸ்கரா' வழங்கியது கண்டி மத சடங்குகளை உச்சக்கட்டத்திற்கு கொண்டு வந்தது.

நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எஸ்ஆர்பீ அலுவிஹார ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூடபிள்யூஎச்ஆர்ஆர்வீஎம்என்டிகேபி நியன்கொட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, 11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்எம்எம் ரணசிங்க டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.