28th September 2023 08:15:22 Hours
இந்தியாவின் ஸ்ரீ மஹா ஆனந்த போதியின் புனித கிளை நடுகையால் புனிதப்படுத்தப்பட்ட புனித அநுராதபுர ஜெய ஸ்ரீ மஹா போதியில், புதன்கிழமை (27) நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து இராணுவ நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் நூற்றுக்கணக்கான பிரதிநிதிகள் 74 வது இராணுவ ஆண்டுவிழாவை (அக்டோபர் 10) முன்னிட்டு ஆசீர்வாதங்களை ஆரம்பித்துள்ளனர்.
அநுராதபுரம் ஜய ஸ்ரீ மஹா போதியில் 'பாரிபோகிக' நினைவுச்சின்னங்கள் வழிபாட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் பங்குபற்றுதலுடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின.
மரபுகளுக்கு இணங்க, இராணுவத் தளபதி முதலில் எட்டு வழிபாட்டுத் தலங்களுக்குமான பிரதம தேரர் அதி வண. கலாநிதி பல்லேகம ஹேமரத்ன நாயக்க தேரர் அவர்களை வணங்கி ஆசி பெற்றதுடன் உடமலுவையில் தேரருக்கு தாம்புலம் மற்றும் 'அட்டபிரிகர' வழங்கி சமய நிகழ்ச்சிகளை நடத்த முறைப்படி அழைத்தார்.
பாரம்பரிய மற்றும் மங்களகரமான மேள தாளம் இசைக்கப்பட்டதுடன் படையினர்கள் அனைத்து படையணி கொடிகளுடன் அணிவகுத்து நின்றனர். பின்னர் அனைத்து கொடிகளும் ஆசீர்வாதத்திற்கு உடமலுவைக்கு எடுத்துச் செல்லப்பட்டன.
இராணுவத் தலைமையகம், தொண்டர் படையணித் தலைமையகம், அனைத்து பாதுகாப்புப் படைத் தலைமையகங்கள், அனைத்து முன்னரங்கு பராமரிப்புப் பகுதிகள், படையணிகள், படைப்பிரிவுகள், பிரகேடுகள் மற்றும் இராணுவப் பயிற்சிப் பாடசாலைகள் ஆகியவற்றின் கொடிகளுக்கு ஆசீர்வாதம் வழங்கப்பட்டது. அதற்கு முன் மூன்று முறை வலம் வந்து புனித போதி மரத்தின் அடிவாரத்தில் இஸ்தாபிக்கப்பட்டது
மகா சங்கத்தினர் ‘செத்பிரித்’ பாராயணங்களுக்கு மத்தியில் ஆசீர்வாதங்களுடன் புனித போதி மரத்தின் அடியில் மல்லிகை தீர்த்தம் தெளித்து, இராணுவக் கொடி இராணுவத் தளபதியிடம் ஒப்படைத்ததுடன், லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் புனித போதியை சுற்றி மல்லிகை மற்றும் தாமரை மலர்களை தூவி தேசத்தின் இன்றியமையாத பாதுகாவலர்கள் மற்றும் அதற்கு சேவை செய்யும் அனைவரின் நலனுக்காகவும் பிரார்த்தனை செய்தார்.
இந்நிகழ்வில் லங்காராம ரஜமஹா விகாரையின் பிரதம தேரர் அதி வண. ரலபனாவே தம்மஜோதி தேரர் அவர்களினால் ஆற்றப்பட்ட விசேட தர்ம சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டதுடன், அவர் இராணுவத்தின் பங்களிப்பையும் அர்ப்பணிப்பையும் பாராட்டினர்.
ருவன்வெலிசேயாவின் பிரதம தேரர் வண. ஈத்தலவெட்டுனுவெவ ஞானதிலக தேரர், மிரிசவெட்டிய விகாரையின் அதிபதி வண. வெலிஹேனே சோபித தேரர், துபாராமய விகாரையின் அதிபதி வண. கஹல்லே ஞானரதன தேரர், அபயகிரிய விகாரையின் அதிபதி வண. கலாநிதி கல்லஞ்சியே இரத்தின தேரர், ஜயந்தி விகாரையின் அதிபதி வண. நுகதன்னே பஞ்ஞானந்த தேரர், ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டர்.
புனித தலத்தின் அபிவிருத்திக்காக இராணுவம் இணைந்து கொண்டிருக்கும் என்பதன் அடையாளச் சின்னமாக மரியாதை மற்றும் பாராட்டுக்கான சைகையாக. விசேட நிதி நன்கொடையை இராணுவத் தளபதி அட்டமஸ்தானாதிபதி அதி வண. கலாநிதி பல்லேகம ஹேமரத்தன நாயக்க தேரர் அவர்களிடம் வழங்கினார்.
மத அனுஷ்டானங்களுக்குப் பின், வளாகத்தில் உள்ள மேற்கு வாசலில் இருந்து புனித வளாகத்திற்குள் நுழையும் அனைத்து நபர்களையும் உடல் பரிசோதனை செய்வதற்காக புதிதாக அமைக்கப்பட்ட சிறப்பு காவலர் அறையை திறந்து வைப்பதற்காக இராணுவத் தளபதி அழைக்கப்பட்டார். சிப்பாய்களினால் அமைக்கப்பட்ட இப் புதிய காவலர் அறை நிர்மாணத்திற்கு மக்கள் வங்கி அனுசரணை வழங்கியுள்ளது.
74 வது இராணுவ ஆண்டு விழா மற்றும் இராணுவ தினத்தை (அக் 10) அறிவிக்கும் இராணுவத்தின் வண்ணமயமான மற்றும் கண்ணியமான தொடக்க கொடி-ஆசீர்வாத விழாவில் கலந்துகொள்வதற்காக அதிகாரிகள் சிப்பாய்கள் மற்றும் பிரதிநிதிகள் இந்த புனிதமான மத அனுஷ்டானங்களில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் போது இராணுவ பதவி நிலை பிரதானி , இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதி, முதன்மை பணிநிலை அதிகாரிகள், பாதுகாப்புப் படைத் தளபதிகள், பணிப்பகத்தின் பணிப்பாளர்கள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பல அதிகாரிகள் இந் நிகழ்ச்சிடயில் கலந்துகொண்டனர்.