Header

Sri Lanka Army

Defender of the Nation

21st September 2023 13:57:57 Hours

ஓய்வுபெறும் மேஜர் ஜெனரல் ஜேஏஆர்எஸ்கே ஜயசேகர அவர்களுக்கு பாராட்டு

34 வருட காலச் சிறப்புமிக்க சேவையின் பின்னர் இராணுவத்திலிருந்து ஓய்வுபெறும் மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜேஏஆர்எஸ்கே ஜயசேகர யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களை அவரது குடும்ப உறுப்பினர்களுடன் இன்று மாலை (செப்டம்பர் 20) இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களினால் இராணுவத் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டார்.

கலந்துரையாடலின் போது, இராணுவத் தளபதி ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சேவைகளைப் பாராட்டியதுடன், ஓய்வுபெறும் அதிகாரியின் தொழில்நுட்பத் திறன்களுடன் தொடர்புடைய நினைவுகளையும் நினைவுகூர்ந்தார். இராணுவத் தளபதியும் அவரது எதிர்காலத் திட்டங்களைக் கேட்டறிந்ததுடன், அவரது எதிர்கால முயற்சிகள் சிறக்க வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இராணுவத் தளபதி ஓய்வுபெறும் மேஜர் ஜெனரல் ஜேஏஆர்எஸ்கே ஜயசேகர யுஎஸ்பீ பீஎஸ்சி அவர்களுடன் சில கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டதுடன், அலுவலகத்திற்கு வருகை தந்திருந்த அவரது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடனும் கலந்துரையாடினார். ஓய்வு பெற்றவரின் குடும்பத்தினர் வெளிச்செல்லும் அதிகாரிக்கு தனது சவாலான பணிகளை செயல்படுத்துவதில் அளித்த ஆதரவையும் அவர் குறிப்பிட்டார்.

மேஜர் ஜெனரல் ஜேஏஆர்எஸ்கே ஜயசேகர யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களும் இராணுவத் தளபதியின் வாழ்த்துக்களுக்கும் வழிகாட்டுதலுக்கும் நன்றி தெரிவித்தார்.

உரையாடல்களின் முடிவில், லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் குடும்பத்திற்கு ஒரு சிறப்பு பரிசுடன் பாராட்டு மற்றும் பாராட்டுக்கான அடையாளமாக வெளியேறும் அதிகாரிக்கு சிறப்பு நினைவுச்சின்னத்தையும் வழங்கினார்.

ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் விவரம்;

மேஜர் ஜெனரல் ஜேஏஆர்எஸ்கே ஜயசேகர யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் 1989 ஜூலை 14 இலங்கை இராணுவ நிரந்தர படையணியில் பயிலிளவல் அதிகாரியாக இணைக்கப்பட்டார். அதன் பின்னர் தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த அவர் இரண்டாம் லெப்டினன் நிலையில் நியமிக்கப்பட்டார். 19 ஜனவரி 1991 இல் இலங்கை மின்சார மற்றும் இயந்திரப் பொறியியல் படையணியில் பதவியேற்றார். இராணுவத்தில் அவர் பணியாற்றிய காலத்தில் அடுத்தடுத்த பதவிகளுக்கு படிப்படியாக உயர்த்தப்பட்ட பின்னர், அவர் 10 அக்டோபர் 2022 அன்று மேஜர் ஜெனரல் பதவிக்கு உயர்த்தப்பட்டார்.

அவர் ஓய்வுபெறும் போது இராணுவ தலைமையகத்தின் மின்சார மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமாக பதவி வகித்து வருகிறார். யாழில் உள்ள 106 பணிமனையின் பணிமனை அதிகாரி, யாழில் உள்ள 106 பணிமனையின் அதிகாரி, 1 வது மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் 102 பணிமனையின் பணிமனை அதிகாரி, மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் பணி நிலை அதிகாரி 3 (நிர்வாகம்), வடக்கு முன்னரங்க பராமரிப்பு பிரிவின் மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் படையினர் கட்டளை அதிகாரி ஹைட்டியில் உள்ள ஐக்கிய நாடுகளின் ஸ்திரப்படுத்தல் மிஷன் இல் உள்ள இலங்கை படையலகின் மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையினரின் கட்டளை அதிகாரி, 4 வது மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் கட்டளை அதிகாரி, மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் பணி நிலை அதிகாரி 1 (வழங்கல்), இராணுவ வழங்கல் பாடசாலையின் சிரேஷ்ட பயிற்றுவிப்பாளர், அபே ஐக்கிய நாடுகள் சபையின் இடைக்காலப் பாதுகாப்புப் படையின் வழங்கல் தலைவர் (தலைமை - ஜே4), பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் பணிப்பாளர், இராணுவ வழங்கல் பாடசாலையின் தலைமைப் பயிற்றுவிப்பாளர், 2 வது மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் கட்டளை அதிகாரி, 12 வது காலாட் படைப்பிரிவின் கேணல் நிர்வாகம் மற்றும் விடுதி), இராணுவ தலைமையக வெளிநாட்டு நடவடிக்கை பணிப்பகத்தின் பிரதி பணிப்பாளர், இராணுவ வழங்கல் பாடசாலையின் படைத் தளபதியும் மற்றும் இராணுவ தலைமையகத்தின் மின்சார மற்றும் இயந்திர பொறியியில் பணிப்பகத்தின் பணிபாளர் போன்ற நியமனங்களில் அவர் பணியாற்றியுள்ளார்.

அவர் தனது இராணுவ வாழ்க்கையில் பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பட்ட படிப்புகளைப் கற்றுள்ளார், அதாவது அதிகாரிகளின் விசேட பாடநெறி, செயல்பாட்டுப் பணியாளர்கள் பணிப் பாடநெறி, இராணுவக் கட்டளை மற்றும் பணியாளர்கள் பாடநெறி, இந்தியா பணிமனை நிறுவனத் தளபதிகள் பாடநெறி, இந்தியா மின்சார மற்றும் இயந்திர பொறியியல் சிரேஷ்ட அதிகாரிகளின் பாடநெறி, இந்தியா இளம் தொழில்நுட்ப அதிகாரிகளின் பாடநெறி மற்றும் சீனா தரைத்தள பீரங்கி பழுதுபார்க்கும் பொறியியல் பாடநெறி ஆகியவையாகும்.

மேலும் சிரேஷ்ட அதிகாரி இங்கிலாந்தின் லண்டன் பிசினஸ் பாடசாலையில் ஆங்கிலத்தில் டிப்ளமோ படித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கதாகும்.