Header

Sri Lanka Army

Defender of the Nation

19th September 2023 18:24:33 Hours

இராணுவ பதவி நிலை பிரதானி பங்களாதேஷ் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரி இளங்கலை பட்டதாரிகளுக்கு அழைப்பு

பங்களாதேஷ் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் 29 பேர் கொண்ட தூதுக்குழு, இலங்கையில் உள்ள பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கொமடோர் எம்.டி. ஷபியுல் பாரி அவர்களுடன் இணைந்து, தற்போது இலங்கையில் ஒரு வாரகால சுற்றுப்பயணத்த்தின் போது ஸ்ரீ ஜயவர்தனபுர இராணுவ தலைமையகத்திற்கு செவ்வாய்க்கிழமை (செப். 19) அழைக்கப்பட்டனர்.

பங்களாதேஷ் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் சிரேஷ்ட பயிற்றுவிப்பாளர் கேப்டன் அப்துல் பஷார் முகமது பைசல் ஹைதர் சாவ்துரி தலைமையிலான பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் குழுவை பயிற்சி பணிப்பக பணிப்பாளர் பிரிகேடியர் பீகேஎஸ் நந்தன ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்சி அவர்கள் இராணுவ பதவி நிலை பிரதானி காரியால வளாகத்திற்கு முன்னால் அன்புடன் வரவேற்றார்.

அதன் பின்னர் தூதுக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பொதுபணி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபீ விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ மற்றும் இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர், இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டபிள்யூஏஎஸ்எஸ் வனசிங்க ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்தனர்.

சுமூகமான உரையாடல்களின் போது, இரு நாடுகளிலும் உள்ள அந்தந்த சேவைகளில் இருதரப்பு பயிற்சி விடயங்களில் இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதுடன் பயிற்சி தொகுதிகள் போன்றவற்றில் புதிய கல்விச் சேர்க்கைகள் பற்றிய கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

இச் சந்திப்பின் இறுதியில் மேஜர் ஜெனரல் டபிள்யூஏஎஸ்எஸ் வனசிங்க ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ அவர்களினால் இராணவத்தின் நல்லெண்ணத்தின் அடையாளமாக சிறப்பு நினைவு சின்னம் கெப்டன் அப்துல் பஷார் முகமது பைசல் ஹைதர் சவுத்ரீ அவர்களுக்கு வழங்கப்பட்டது.

சிறிது நேரத்திற்குப் பிறகு, 'இலங்கை இராணுவம்' என்ற தலைப்பில் பயிற்சி பணிப்பகத்தின் கேணல் பயிற்சி கேணல் டி.டி.ஜி.ஏ ஜயவர்தன யுஎஸ்பீ பீஎஸ்சி அவர்களால் நடத்தப்பட்ட விரிவான விளக்கத்தை பிரதிநிதிகள் கவனத்துடன் செவிமடுத்தனர். அவர்கள் புறப்படுவதற்கு முன், அனைத்து சிரேஷ்ட அதிகாரிகளுடன் சேர்ந்து சில குழு படங்களை எடுத்துக்கொண்டனர்.

ஆராய்ச்சி மற்றும் கோட்பாடு பணிப்பக பணிப்பாளர் பிரிகேடியர் ஆர் எல்விட்டிகல,சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் அன்றைய நிகழ்ச்சியில் பங்குபற்றினர்.