Header

Sri Lanka Army

Defender of the Nation

19th September 2023 20:54:14 Hours

முன்னாள் இராணுவ வீரர்கள் இராணுவத் தளபதிக்கு பொப்பி மலர் அணிவிப்பு

இலங்கை முன்னாள் படைவீரர் சங்கத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (19) பிற்பகல் மறைந்த போர் வீரர்களுக்கான பொப்பி மலர் தினத்தை முன்னிட்டு இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களுக்கு இராணுவ தளபதி அலுவலகத்தில் பொப்பி மலர் ஒன்றை அணிவித்தனர்.

இலங்கை முன்னாள் படைவீரர் சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் டபிள்யூஜீஎம்யூஆர் பெரேரா (ஓய்வு) யூஎஸ்பீ அவர்கள் இராணுவத் தளபதிக்கு பொப்பி மலரை அணிவித்தார். இந்த ஆண்டின் நிறைவு நிகழ்வு இன்னும் சில நாட்களில் இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பின் போது இராணுவத் தளபதி அவர்கள் பிரதிநிதிகளுடன் சுமுகமான கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டதுடன், அனைத்து முன்னாள் படைவீரர்களின் நலனுக்காக அவர்களின் தற்போதைய நலத்திட்டங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.

அவர்கள் வெளியேறுவதற்கு முன், இராணுவத் தளபதி அவர்கள் இலங்கை முன்னாள் படைவீரர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு நினைவுச் சின்னங்களை வழங்கி அவர்களின் நல்ல பணியைப் பாராட்டியதுடன் அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

பொப்பி கழகத்தின் தலைவர் பிரிகேடியர் ஏ.எச்.லியனகே (ஓய்வு), இலங்கை முன்னாள் படைவீரர் சங்கத்தின் செயலாளர் லெப்டினன் கேணல் ஏ.கே சியம்பலாபிட்டிய (ஓய்வு) பீஎஸ்சீ எல்எஸ்சீ, மேஜர் பீகேசிஎஸ் கங்கணம்கே (ஓய்வு) யுஎஸ்பீ மற்றும் பொப்பி கழகத்தின் பல உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

முதலாம் உலகப் போரின் முடிவில் இருந்து அனைத்து பொதுநலவாய நாடுகள் உட்பட உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை பொப்பி தினம் கொண்டாடப்படுகிறது.