14th September 2023 20:25:49 Hours
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட உபவேந்தர் ரியர் அட்மிரல் எச்ஜியூ தம்மிக்க குமார வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சீ எம் மெரிடைம் பொல் பிஎஸ்சீ (டிஎஸ்) அவர்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை வியாழக்கிழமை (14) இராணுவ தலைமையகத்தில் சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் எச்ஜியூ தம்மிக்க குமார வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சீ எம் மெரிடைம் பொல் பிஎஸ்சீ (டிஎஸ்) அவர்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்து கொண்ட அவர் முன்மொழியப்பட்ட பாடநெறிகள் மற்றும் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் முன்னேற்றம் தொடர்பாக கலந்துரையாடினர்.
கலந்துரையாடலின் முடிவில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ மற்றும் ரியர் அட்மிரல் எச்ஜியூ தம்மிக்க குமார வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சீ எம் மெரிடைம் பொல் பிஎஸ்சீ (டிஎஸ்) இருவரும் நல்லெண்ணம் மற்றும் நினைவுக்கான நினைவுச் சின்னங்களை பரிமாறிக்கொண்டனர்.