Header

Sri Lanka Army

Defender of the Nation

08th September 2023 09:33:58 Hours

‘அமாரிய சீல்ட்’மற்றும்‘யுதபிமே குருட்டு கீ’ உண்மை ஆவண அத்தியாயங்கள்

'அமாரிய சீல்ட்' புத்தகத்தின் வெளியீட்டு விழா மற்றும் கிராபிட்டியின் தொகுப்பு, 'யுதபிமே குருட்டு கீ' புத்தகம், இவை இரண்டும் இராணுவத் தலைமையகத்தின் உளவியல் நடவடிக்கைகள் பணிப்பகத்தின் இராணுவத்தின் 'ரணவிருவா' பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லெப்டினன் கேணல் எஸ்.சி எதிரிசிங்க அவர்களால் எழுதப்பட்டது. இப் புத்தகம் கொழும்பு 7, மகாவலிகேந்திராவில் இடம்பெற்ற நிகழ்வின் போது இராணுவ அதிகாரிகள் மற்றும் ஏனைய அழைப்பாளர்கள் முன்னிலையில் (செப்டம்பர் 7) பிற்பகல் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களுக்கு வழங்கப்பட்டது.

சுருக்கமான வரவேற்புக்குப் பிறகு, இரண்டு புத்தகங்களின் ஆசிரியர் பார்வையாளர்களுக்கு இரண்டு புத்தகங்களைப் பற்றியும் தெளிவுபடுத்தினார், மேலும் இந்த சிறுகதைகள் மற்றும் கிராஃபிட்டி வசனங்களின் புத்தகம் ஆகியவற்றைத் தொகுக்கத் தூண்டியது என்ன என்பதை விளக்கினார், இவை அனைத்தும் இராணுவ வீரர்களால் தொகுக்கப்பட்டு வெற்றிகரமான நிறைவுக்கு பங்களித்தன. மே 2009 க்கு முன்னர் போர்க்களத்தில் மனிதாபிமான நடவடிக்கைகள் போருக்குப் பின்னரான பழைய பதுங்கு குழிகள் மற்றும் ஏனைய இடங்களுக்குச் சென்றபின் ஆசிரியரின் நெருக்கமான ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகள் அந்த இரண்டு புத்தகங்களை எழுதுவதற்கு உதவியது என குறிப்பிட்டார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு, அவர் தனது புத்தகங்களின் முதல் பிரதியை மேஜர் ஜெனரல் சிடி ரணசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ மற்றும் பிற அழைப்பாளர்களுக்கு வழங்கினார். நேர்த்தியான உரைநடை போர்க்களத்தில் நிகழ்ந்த 22 உண்மைக் கதைகளைக் கொண்டது. இதுவரை லெப்டினன் கேணல் எஸ்.சி எதிரிசிங்க எல்.ரீ.ரீ.ஈ போர் வரலாறு மற்றும் புலிகளின் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இராணுவத்தின் திறமையான பங்களிப்பு தொடர்பான 8 புத்தகங்களை எழுதியுள்ளார்.

மங்கள விளக்கேற்றலுடன் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சிகள் ஆரம்பமானது. சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் அழைப்பாளர்கள் நூல் ஆசிரியருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.